Tamil Serial News : சீரியல் ரசிகர்கள் பலரும் சன் டிவி-யில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலை மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது அந்த சீரியல். அதில் தேவையானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை மஞ்சரி.
6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்
நடிகை மஞ்சரி
நடிகை குட்டி பத்மினி மூலம் சின்னத்திரை சீரியலில் நுழைந்த இவர் முதன் முதலாக உறவுகள் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். கோலங்கள், அண்ணாமலை உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் பிற மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் மஞ்சரி. ஆனால் திருமணத்திற்கு பிறகு தமிழ் சீரியலை விட்டு விலகினார். சிங்கப்பூரைச் சேர்ந்த மஞ்சரி முதல் முதலாக உறவுகள் என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமாகியதாக, ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு அவருக்கு நிறைய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். தமிழில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்துள்ளார்.
புது ஹேர்ஸ்டைலில் மஞ்சரி
பாசிட்டிவ்,நெகட்டிவ் என எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவர். ஆனால், மஞ்சரிக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் நன்றாக இருக்கும் என நிறையப் கூறியிருக்கிறார்களாம். இது குறித்து ஒரு நேர்க்காணலில் பேசியிருந்த மஞ்சரி, ”நெகட்டிவாக இருக்கும் கதாபாத்திரங்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படும். சில சமயம் கதாநாயகிகளை விட நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு தான் பாப்புலர் அதிகம். மேலும், அந்த கதாபாத்திரத்துக்கு தான் மக்களிடம் அதிக வரவேற்பும் கிடைக்கும். எனக்கு எப்பவுமே சீரியல்ல அழுகுற காட்சிகள் வந்தால் பிடிக்காது. ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஏன்னா, நான் கொஞ்சம் தைரியமான பொண்ணு தான். மக்கள் எங்களை திட்டுவது தான் எங்களுக்கு பலமே” என்று தெரிவித்திருந்தார்.
ஸ்லிம் அண்ட் சிக்காக...
தொடர்ந்து பேசிய அவர், “நான் கர்ப்பிணியாக இருக்கும் போது கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். பின் சீரியலில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பிறகு என்னால் சீரியலில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு நான் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டேன். நான் என்னுடைய கேரியரை விடவில்லை. மீண்டும் சிங்கப்பூரில் உள்ள சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது மட்டுமில்லாமல் தமிழ் சீரியலில் நடிக்க எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால், இப்போது வரை எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
”அது உங்க மைண்ட்ல தான் இருக்கு” ரியோவுடன் முற்றிய சண்டை
சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்ட மஞ்சரி, தற்போது உடல் எடையைக் குறைத்து, சிக்கென்று இருக்கிறார். அங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”