Tamil Serial News: சீரியல், சினிமா மீண்டும் சீரியல், தொழில் முனைவோர் என படு பிஸியாக வலம் வருகிறார் நடிகை சந்தோஷி ஸ்ரீகர்.
நல்ல குரல் வளம், நகைச்சுவை திறன்: பலே ஷிவாங்கி!
2000-ல் ’பெண்கள்’ என்ற படத்தில் நடித்தாலும், அடுத்தப் படத்தில் ‘பாபா’ படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். குறிப்பாக, ‘உனக்கும் எனக்கும்’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான ‘நுவ்வோஸ்டானந்தே நேனோடந்தனா’ படத்தில் நடித்து, சிறந்த பெண் காமெடி நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார்.
இருப்பினும் சினிமாவில் எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்காததால், சீரியல்களில் தனது முழு கவனத்தையும் செலுத்திய சந்தோஷி, நிறைய சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ’வாழ்க்கை’, ’ருத்ர வீணை’, ’அம்மு’, ’அரசி’, ’இளவரசி’, ’சூரிய புத்திரி’, ’வாடகை வீடு’, ’இல்லத்தரசி’, ’மரகத வீணை’, ’பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்’, ’பாவ மன்னிப்பு’, ’பொண்டாட்டி தேவை’, ’அரசி’ உள்ளிட்டவைகள் சந்தோஷி நடித்த சீரியல்கள். இறுதியாக சன் தொலைக்காட்சியில் ‘மரகத வீணை’ தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இதற்கிடையே இரண்டாவது முறை கர்ப்பமானதால், சீரியலுக்கு இடைவெளி விட்டிருக்கிறார்.
,
தன்னுடன் நடித்த ஸ்ரீகர் என்பவரை மணந்துக் கொண்ட சந்தோஷிக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார். தவிர, ப்ளஷ் பொட்டிக் அண்ட் பியூட்டி லாஞ்ச் என பெண் தொழில் முனைவோராகவும் மிளிர்கிறார். தவிர மேக்கப் ஆர்டிஸ்ட் பயிற்சியும் கொடுத்து வருகிறார் சந்தோஷி. சீரியல் நடிகைகளுக்கு அவ்வப்போது, ப்ளஷ் பொட்டிக், பியூட்டி லாஞ்ச் மூலம் ஃபோட்டோ ஷூட்களும் நடத்தியிருக்கிறார். குறிப்பாக பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா இந்திரஜாவுக்கு, சந்தோஷி செய்திருந்த மேக்கப் பெரிதாக பேசப்பட்டது.
Ponmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.?
சந்தோஷியின் அம்மா பூர்ணிமா முன்னாள் டிவி நடிகை. ”நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். 13 வயதில் ”வாழ்க்கை” சீரியலில் நடித்தது இன்னமும் என்னை அடையாளப்படுத்துகிறது. எனக்கு குறும்புத்தனமான கேரக்டர் பண்ண ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழுது நடிக்கிற மாதிரி கேரக்டர் பிடிக்காது. ஆனா எனக்கு கிடைப்பது எல்லாம் அழுகை சீரியல்தான் கிடைக்கின்றன. அதோடு அழுது நடிக்கிறவர்களைத் தான் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று முன்பு ஒரு பேட்டியில் சந்தோஷி குறிப்பிட்டிருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”