இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்திருந்தார்

Serial Artist Sri Durga, Sun tv, vijay tv
Serial Artist Sri Durga, Sun tv, vijay tv

Serial Artist Durga : சின்னத்திரையில் பல வருட ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீ துர்கா. இளமையான ஹோம்லி லுக்கான முகம் இவருடையது. சிறுவயதிலிருந்தே சினிமா, சீரியலில் நடித்து வரும் இவர் பெரும்பாலான கதாபாத்திரங்களில் அழு மூஞ்சியாகவே நடித்திருப்பார்.  மாடலிங் துறையில் கால் பதித்த ஸ்ரீ துர்கா, அதனைத் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பெயர் கௌதம். இவர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

உற்சாக அஞ்சலி, கார்ஜியஸ் யாஷிகா – படத் தொகுப்பு

இதனைத் தொடர்ந்து சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான, ’உறவுகள்’, ’தியாகம்’ ’முந்தானை முடிச்சு’ தொடர்களிலும் நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் கேப்டன் டிவி-யில் சில தொடர்களில் நடித்த இவர், ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றையும் தயாரித்து வழங்கினார். எல்லா கேரக்டரும் அமைதியான, பொறுமையான கதாபாத்திரங்கள் தான் ஸ்ரீ துர்காவுக்கு. இதைத் தொடர்ந்து ’ஊஞ்சல்’, ’அலைகள்’, ’சிகரம்’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். ஊஞ்சல் சீரியலில் தான் ஸ்ரீதுர்கா, முதன் முதலாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு அந்த சீரியலில் முதல் பாதியில் நெகடிவ் கேரக்டரும், இரண்டாம் பாதியில் தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாசிட்டிவான கேரக்டரிலும் நடித்திருந்தார்.

Serial Artist Sri Durga, Sun tv, vijay tv
ஸ்ரீ துர்காவின் குடும்பம்

‘உறவுகள்’ சீரியலில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் யாரும் அந்த அளவுக்கு மறந்திருக்க மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் கோபமே வராத, கதாபாத்திரம் அது. துர்காவுக்கு எப்போதுமே நகைச்சுவை கேரக்டர்கள் தான் ரொம்ப பிடிக்குமாம். ஏனென்றால் மற்றவர்களை ஜாலியாக வைத்திருப்பது அவருக்கு பிடிக்கும். ஆனால், அந்த மாதிரி கேரக்டர்கள் நிறைய கிடைக்கவில்லை என பல நேரங்களில் கூறியுள்ளார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘பொய் சொல்ல போறோம்’ என்ற தொடரில் கொஞ்ச நாட்கள் மட்டும் காமெடி செய்திருக்கும் கதையிலும் நடித்திருந்தார்.

அதோடு சில திரைப்படங்களிலும் ஸ்ரீ துர்கா நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னால் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்திருந்தார். ஸ்ரீ துர்காவுக்கு நடிப்பை தவிர, சங்கீதத்தில் அதிக ஆர்வம் உண்டு. ஏனென்றால் இவர்களுடைய ஒட்டு மொத்த குடும்பமே, சங்கீதக் குடும்பம் என்று சொல்லலாம். அதனால் ஸ்ரீ துர்காவும் முறையாக சங்கீதம் பயின்றவர்.

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை: விஷவாயு கசிந்து 5 பேர் பலி

எனவே தான் சங்கீத துறையில் வர வேண்டும் என்பது ஸ்ரீ துர்காவின் ஆசையாம். அதோடு சின்ன வயதில் இருந்தே, அவருக்கு போட்டோகிராபி எடுப்பதில் அதிக ஆர்வமாம். வருங்காலத்தில் இசைப்பள்ளி ஒன்றை நடத்த வேண்டுமென்றும் என்பதும், அதில் படிக்க வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதும் ஸ்ரீ துர்காவின் லட்சியமாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news serial artist sri durga sun tv vijay tv

Next Story
’இதனால தான் கிளாமரா நடிச்சேன்’ : ‘மானாட மயிலாட’ நீபாserial actress neepa cry, neepa cry in zee tamil tv, zee tv super mom show, சிரியல் நடிகை நீபா, சூப்பர் மாம், ஜீ தமிழ், neepa daughter solves her crying, neepa daughter, super mom reality show
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com