Sri Kala : சின்னத்திரையில் 25 வருடங்களுக்கு மேலாக நடித்துவருபவர், ஶ்ரீகலா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இறுதியாக சன் டிவியின் ‘கல்யாணப்பரிசு’ சீரியலில் நடித்தார். பாசிட்டிவ், நெகட்டிவ் என தன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர்.
54 வயதில் நடிகர் இர்பான் கான் மரணம்: அதிர்ச்சியில் பாலிவுட்
பக்கத்து வீட்டு நண்பர் மூலம் ஸ்ரீ கலாவுக்கு சினிமா வாய்ப்பு வந்ததாம். ‘தேவர் மகன்’ அவர் நடித்த முதல் படம். தொடர்ந்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வரவே, பாசிட்டிவ், சீரியல் ரோல் என ஆல்ரவுண்டராக வலம் வந்தார். அவருடன் நடித்த பலரும் இப்போ ஃபீல்டில் இல்லை. ஆனால் தன்னை வளர்த்து விட்ட மீடியாவை சட்டென உதற மனசில்லாமல், தொடர்ந்து நடிப்பதாக கலா தெரிவித்திருந்தார்.
சீரியல் ஷூட்டிங்கில், சக நடிகைகளுடன்...
தன் குடும்பத்தைப் பற்றி ஒரு நேர்க்காணலில், “என் கணவர் பிசினஸ் பண்றார். எங்க பொண்ணு ஹம்சவர்த்தினி. மூணாம் கிளாஸ் படிக்கிறாள். என் கணவர், ‘பாப்பாவைப் பார்த்துக்கிறது ரொம்ப முக்கியம்’னு சொல்லிட்டார். நிஜம்தானே. இந்த வயசுல நான் அவளோடு இருந்தாகணும். என்னோட கவனம் முழுக்க பாப்பாவை வளர்க்கிறதில் இருக்கு. அதனாலேயே, நிறைய புராஜெக்ட்ஸை மறுத்துட்டேன். ஒருவேளை ரொம்ப நல்ல புராஜெக்ட் வந்தால் நடிப்பேன்” என்றார்.
தனது முதல் கேமரா அனுபவம் குறித்து பகிர்ந்த அவர், ”தேவர் மகன்’ படத்தில் நடிக்கும் போது கமல் சார், கெளதமி மேம், ரேவதி மேம் எல்லோருக்கும் பெட் நான் தான். ஆனால், அந்தப் படம் முடிஞ்சு இத்தனை வருஷமாகியும் அவங்களை மறுபடி சந்திக்கும் வாய்ப்பு அமையல. எனக்குப் படங்களைவிட சீரியலில் நடிக்கவே பிடிச்சிருந்தது. அதனால்தான் படங்களைத் தவிர்த்துட்டேன். சீரியல் மூலமா நிறைய பேருக்கு என் முகம் பரீட்சையமாச்சு. நான் வாங்கியிருக்கும் அவார்டுகளை வைக்கவே வீட்டுல இடம் இல்ல. அந்த அளவுக்கு என் நடிப்புக்கான அங்கீகாரம் நிறைய கிடைச்சிடுச்சு. ஆரம்பத்தில், பிஸியா நடிச்சுட்டிருந்ததால், பத்தாம் வகுப்புக்கு மேலே படிக்கலை.
குழந்தையுடன் ஸ்ரீகலா...
பொது முடக்கம் நீடிக்குமா? ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 10 அறிவுரைகள்
என்னைப் பார்க்கும் ரசிகர்கள், ‘நீங்க ஏன் முன்ன மாதிரி நிறைய சீரியலில் நடிக்கிறதில்லை’னு கேட்கிறாங்க. இப்பவும் என்னை யாரும் மறக்காததை நினைச்சா ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றார். அதோடு ஸ்ரீகலாவுக்கு பேண் தொழில் முனைவோராக வேண்டும் என்பது தான் ஆசையாம். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, நேரம் கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது என, தன்னை பிஸியாக வைத்திருக்கிறாராம் ஸ்ரீகலா. அதோடு தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது பூஜை செய்து விடுவாராம். அந்தளவுக்கு கடவுள் பக்தி அதிகமாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”