Sun TV Kanmani Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் லீசா எக்லெர்ஸ்.
க்யூட் ராஷ்மிகா மந்தனா: கார்ஜியஸ் ஸ்ருதி – புகைப்படத் தொகுப்பு
கண்மணி சீரியலில் சஞ்சீவ் - கண்ணன் கதாபாத்திரத்திலும், லீஷா எக்லர்ஸ் - சௌந்தர்யா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் ஆரம்பத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தார்கள். பின் ஆரம்பத்தில் ஹீரோ கதாபாத்திரத்துக்கு ஜோடி யார்? என ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். பின்னர் தான் செளந்தர்யா ஜோடியானார். நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும்,1991-ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, மாடலிங் செய்ய தொடங்கினார்.
,
லீஷா மாடலிங் செய்ய தொடங்கியவுடன் சினிமா துறையில் இருந்து பட வாய்ப்புகள் நிறைய வந்தன. ஆனால், அவர் முதலில் படத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறி விட்டாராம். பின்னர், என்ன நினைத்தாரோ? தெரியவில்லை படங்களில் நடிக்கத் தொடங்கினார். இயக்குநர் மற்றும் நடிகர் எம்.சசிகுமார் தயாரிப்பில், பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’ என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீசா. அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்தார்.
மனிதர்களை மிஸ் செய்யும் டால்ஃபின்கள் ; உணவளிப்பவர்களுக்கு கடலுக்குள் இருந்து கிஃப்ட் தரும் விநோதம்
இப்படி திரைப்படங்களில் இவ்வளவு படம் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை என்ற சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரே தொடரில் ஹிட் ஆகிவிட்டார். லீஷாவுக்கு மிகவும் பிடித்தது படம் பார்ப்பது தானாம். பாட்டு கேட்பதும், விதவிதமான உணவுகளை ருசி பார்ப்பதும் அலாதி பிரியமாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”