மனிதர்களை மிஸ் செய்யும் டால்ஃபின்கள் ; உணவளிப்பவர்களுக்கு கடலுக்குள் இருந்து கிஃப்ட் தரும் விநோதம்

டால்ஃபின்களின் இந்த உணர்வுப்பூர்வமான செயல்களை கண்டு நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Dolphins in Australia start giving more ‘gifts’ to volunteers : கொரோனா வைரஸால் இந்த உலகம் எவ்வளவு மாறிவிட்டது. சாலைகளில் கூட்டம் இல்லை. உணவகங்களில், சுற்றுலா பிரதேசங்களில், கோவில்களில், பள்ளிக் கூடங்களில் எங்குமே மனிதர்கள் இல்லை. மனிதர்களோடு இணைந்த சூழலில் வாழ்ந்து பழகிவிட்ட விலங்குகளுக்கும் இது மிகவும் மோசமான காலம் தான். பல்வேறு இடங்களில் வாழும் விலங்குகள் தங்கள் மீது அன்பு செலுத்தும் மனிதர்கள் இல்லாமல்  திணறித்தான் போய் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ளது டின் கேன் பே என்ற இடம். அங்கு இருக்கும் பர்னாக்கிள்ஸ் கேஃபேயில் உணவருந்த வரும் நபர்கள் அங்குள்ள டால்பின்களுக்கு உணவு அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால், அங்கு மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. அதனால் டால்ஃபின்கள் மனிதர்களை ரொம்பவே மிஸ் செய்ய துவங்கியுள்ளது.

மேலும் படிக்க : இப்போதாவது யோசிக்கின்றார்களே? இந்த மெடிக்கல் ஷாப் தான் இப்போ வைரல் ஹிட்!

தற்போது, அந்த உணவகத்தில் எப்போதாவது வரும் மனிதர்களுக்காக கடலுக்குள் இருந்து அதியசமான பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து மக்களுக்கு தருகிறது. அந்த உணவகமும், விரைவில் டால்ஃபின் ஃபீடிங் மற்றும் கஃபேயை மறுபடியும் திறந்தால் இந்த ஜீவன்களின் முகத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர். டால்ஃபின்களின் இந்த உணர்வுப்பூர்வமான செயல்களை கண்டு நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க : வெள்ளை நிறத்தில் மான்கள் பார்த்ததுண்டா? அதுவும் இத்தனை அழகாக?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

Dolphins in Australia start giving more ‘gifts’ to volunteers

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close