Priyanka Nalkar : ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சீரியல் நடிகைகளில் பிரியங்கா நல்காருயும் ஒருவர். சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா, நாராயணகுடாவிலுள்ள பிரிலியண்ட் கிராமர் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு தர்ஷியில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா கல்லூரியில், கல்லூரி படிப்பையும் முடித்தார்.
இருபதுகளின் நடுப்பகுதியில், பிரியங்காவின் நல்ல உடலமைப்பு அவருக்கு மாடலிங் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. ‘ரகலஹாரி’, ‘வெல்கம் டு அமெரிக்கா’, ‘குன்னா மாமிடி கம்மா மீடா’ போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010-ல் ’அந்தரி பந்துவயா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் 5,6 படங்கள் நடித்த இவர், இயக்குநர் ராகவா லாரன்ஸின் ’காஞ்சனா 3’ படத்தில், நிக்கி தம்போலியின் சகோதரியாக நடித்திருந்தார்.
Advertisment
Advertisements
நாகர்ஜுனா, பத்மாபிரியா போன்றோருக்கு தங்கையாக தெலுங்கில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு 15-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து முடித்து விட்டு, தமிழுக்கு வருகை புரிந்தார். இவருக்கு அம்லு, பிரியங்கா ராவ், பிரியங்கா ஸ்மைலி என பல செல்லப் பெயர்களும் உள்ளன. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பிரியங்காவுக்கு அவரது புன்னகைக்கென்றே ரசிகர்கள் அதிகம். சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில், ரோஜா - அர்ஜூனின் ரொமான்ஸ் ரசிகர்களிடம் படு பிரபலமான ஒன்று. ரோஜாவின் க்யூட்னெஸ் அத்தனை ரசிக்கும்படியாக இருக்கும்.
பிரியங்காவுக்கு காண்டினெண்டல் உணவு என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். சோர்வாக இருக்கும் போது, பாடல்கள் கேட்பதும், அதிரடி விளையாட்டுகளில் ஈடுபடுவதும் ரோஜாவின் ஃபேவரிட் விஷயங்களாம்...
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”