Shamili Sukumar: சினிமா நடிகைகளைப் போலவே, சீரியல்களில் நடிக்கும், நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் டிவியின் மூலம் ரசிகர்களை சந்திக்கும், டிவி பிரபலங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இன்னுமே அதிகம். குறிப்பாக சீரியலில் நடிக்கும் வில்லி / வில்லன்களை நிஜ வில்லனாக பார்க்கும் வழக்கமும் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.
ரெட்ரோ வரலட்சுமி, இந்த யோகா டீச்சர் யாரு? – புகைப்படத் தொகுப்பு
அந்த வகையில் நிறைய பேரிடம் திட்டு வாங்கியவர் தான் ஷாமிலி சுகுமார். இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில், பிரியா எனும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர். சென்னையில் பிறந்து வளர்ந்த ஷாமிலி, சின்னத்திரையில் நுழைந்து குறுகிய வருடங்களில் 20 சீரியலுக்கு மேல் நடித்து உள்ளார். சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து ரசிகர்களிடம் பாப்புலராகியிருக்கிறார்.
ஷாமிலி முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். முதல் சீரியலிலேயே இவருக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வாணி ராணி, பொன்னூஞ்சல், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த, ஷாமிலிக்கு, காமெடி, டான்ஸிங், சிங்கிங் என பிடித்தவைகள் ஏராளம். சமீபத்தில் சன் குடும்ப விருது விழாவில், சிறந்த வில்லிக்கான விருதைப் பெற்ற ஷாமிலி, ‘எங்கம்மா என் கூட நடிக்கிறவங்க எல்லாரையும் பாராட்டுவாங்க. ஆனா ஒருநாள் கூட நான் நல்லா நடிச்சேன்னு சொன்னதே இல்ல. இந்த விருதை அவங்க ஏத்துக்குவாங்களான்னு தெரியாது’ என்றவாறு அழுதார். அப்போது அரங்கில் இருந்தவர்களின் கண்களும் கலங்கின.
பிக்பாஸ் சீசன் 3: சாக்ஷியிடம் கவின் இப்படியுமா பேசி இருக்காரு?
ஃபாஸ்ட் ஃபுட், அசைவம், அட்வெஞ்சர்ஸ் விளையாட்டுகள் இவையெல்லாம் ஷாமிலிக்கு, ரொம்பவும் பிடித்தவைகளாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.