Advertisment

’கணவருக்காக பிரேக் எடுத்திருக்கிறேன்’: ‘வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி

’சித்தி’, ’அகல் விலக்கு’, ’கண்ணாடி கதவுகள்’, மற்றும் கிரேஸி மோகனின் நகைச்சுவைத் தொடரான விடாது சிரிப்பு போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanna Vanna pookkal vinodhini, Tamil Serial news

Vanna Vanna pookkal vinodhini, Tamil Serial news

Tamil Serial News: உங்களுக்கு நடிகை வினோதினியை ஞாபகம் இருக்கிறதா? தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் வெளியான படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

Advertisment

விஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை

வினோதினி குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மணல் கயிறு, புதிய சாகப்தம் மற்றும் மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.  தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் முன், 1992-ல், பாலு மகேந்திரா இயக்கிய ’வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான பெயர் பெற்று, தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அதோடு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. அதே ஆண்டு, வினோதினி மலையாள சினிமாவிலும் கன்னட திரையுலகில் ஸ்வேதா என்ற பெயரிலும் அறிமுகமானார்.

பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’, விசுவின் ’பட்டுகோட்டை பெரியப்பா’, ராம நாராயணனின், ’வாங்க பார்ட்னர் வாங்க’,  கே.எஸ்.ரவிக்குமாரின், ’சூரியன் சந்திரன்’ மற்றும் ’முத்துக்குளிக்க வாரியளா’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இரண்டாம் நிலை கதாபாத்திரங்களாகவே கிடைத்தன. அதனால் 1990-களின் நடுப்பகுதியில் கன்னட படங்களில் கவனம் செலுத்திய வினோதினிக்கு, அங்கு முக்கிய வேடங்கள் கிடைத்தது. 90-களின் பிற்பகுதியில் தமிழ் படங்களில் அவர் பணியாற்றியது, சிறிய துணை வேடங்கள் மற்றும் கெஸ்ட் ரோல்கள் மட்டுமே.  பிரவீன் காந்தியின் அதிரடி திரைப்படமான ’ரட்சகன்’, சுந்தர் சி-யின் ‘உனக்காக எல்லாம் உனக்காக’ உள்ளிட்ட படங்களைக் கூறலாம்.

அதோடு வினோதினி விரைவில் தொலைக்காட்சி சீரியல்களிலும் தோன்றினார். ’சித்தி’, ’அகல் விலக்கு’, ’கண்ணாடி கதவுகள்’, மற்றும் கிரேஸி மோகனின் நகைச்சுவைத் தொடரான விடாது சிரிப்பு போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினார். தவிர, எட்டு ஆண்டுகளாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணவருக்கு விபத்து ஏற்பட்டதையடுத்து சன் டிவி-யின் ’அக்னி நட்சத்திரம்’ தொடரிலிருந்து விலகிவிட்டார்.

ஜோதிடர் பேச்சை நம்பி மனைவியின் வயிற்றில் உதைத்து கருவை கலைத்த கணவர்

வெங்கட் ஶ்ரீதர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் வினோதினி. பிறகு கொஞ்சகாலம் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரின் பிசினஸ் சூப்பராக போனதாலும், குழந்தைகள் இருப்பதாலும் அவருக்கு நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இதனால் பொறுப்பான குடும்பத் தலைவியாக தன்னுடைய பணியை செய்து வந்தார். இருந்தாலும் இவருக்கு சினிமா, சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், குழந்தைகள் வளர்ந்த பின்னால் நடித்து கொள்ளலாம் என்று நினைத்து வேணாம் என்று சொல்லிவிட்டார். பின்னர் சன் டிவி-யின் அக்னி நட்சத்திரம் சீரியலில், ‘வண்ண வண்ண பூக்கள்’ மெளனிகாவுடன் இணைந்து நடித்து வந்தார். அந்த சமயத்தில் வினோதினியின் கணவருக்கு விபத்து ஏற்பட்டுவிடவே, அதிலிருந்து விலகி விட்டார். எல்லாம் சரியானதும், மீண்டும் சீரியல்களில் என்னைப் பார்க்கலாம் என்கிறார் வினோதினி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Sun Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment