’26 வயசுல அம்மா நடிகையானேன்’: ‘அரண்மனைக்கிளி’ பிரகதி!

’தெக்கத்தி பொண்ணு’, ’வம்சம், ’யமுனா’ ஆகிய சீரியல்களில் நடித்தார். அதோடு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘அரண்மனைகிளி’ தொடரிலும் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்தார். 

By: July 26, 2020, 8:08:14 AM

Pragathi: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘அரண்மனைக்கிளி’ சீரியலை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் ஹீரோவின் அம்மா மீனாட்சியாக நடித்திருந்தவர் நடிகர் பிரகதி. சீரியலில் மட்டுமல்ல பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குநர் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் மூலமாகத் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானார் பிரகதி. அறிமுகப்படம் வெற்றிப்படமாகவே அமைந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஆகையால் சோர்வுடன் போராடிக் கொண்டிருந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

Memory lane ????

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

காய்ச்சலோடு கொஞ்சம் காதல்: கதிர்-முல்லை ரொமான்ஸ் ரெடி!

ஒரு படப்பிடிப்பில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுடன் இவர் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிரகதிக்கு தெலுங்கில் இருந்து ஒரு வாய்ப்பு வந்ததாம். தொலைபேசியில் அழைத்தவர்கள், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸில் இருந்து பேசுவதாகவும் அவர்கள் புதிதாகத் துவங்கவிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மாவாக நடிக்க பிரகதிக்கு விருப்பமா? என்றும் கேட்டிருக்கிறார்கள். அதிர்ந்துப் போயிருக்கிறா பிரகதி. காரணம் அப்போது அவருடைய வயது வெறும் 26 தானாம்.

 

View this post on Instagram

 

I changed a lot.. yes… a lot changed me????

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

குழந்தையாக இருந்தால் பரவாயில்லை, ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் வயதா இது என்று யோசித்திருக்கிறார். இவர் குழம்பிப் போயிருப்பதைக் கண்டு காரணம் கேட்ட, ஸ்ரீவித்யாவிடம் தனது பிரச்னையை சொல்லியிருக்கிறார் பிரகதி.

 

View this post on Instagram

 

Chin up… you are not struggling, you are in midst of conquering ????????????

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

”நீ நடிகை… எந்த வேடமாக இருந்தாலும் நடிக்கத்தானே வேண்டும். அம்மாவா என்று ஏன் யோசனை? நான் கூட வெகு இளம் வயதில் அம்மா நடிகையாக ஆனேன். நீயும் அப்படி முடிவெடு என்று சொல்லவில்லை. அம்மா வேடத்திற்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. நீ ஹீரோயினாகவே மட்டும் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தால் நிறையக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஒருவேளை வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் என்ன செய்வாய்? சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தெலுங்கில் பெரிய நிறுவனம். அவர்களது படத்தில் அம்மாவாக நடிப்பதென்றால் நிச்சயம் அது சும்மா வந்து நின்று விட்டுப் போகும் வேலையாக இருக்காது. நிச்சயம் பெயர் சொல்லிக்கொள்ளும் படியாகவே இருக்கும். அதனால் வாய்ப்பை தவற விட்டு விடாதே” என்று அன்புக் கட்டளையிட்டாராம்.

குழப்பம் தெளிந்த பிரகதி ‘ஓகே’ சொல்லியிருக்கிறார். ஸ்ரீ வித்யா சொன்னது போல அதன் பிறகு பிரகதிக்கு ஏறுமுகம் தான். அன்று மட்டும் அந்த வாய்ப்பை மறுத்திருந்தால், இன்றைய நிலைமை நிச்சயம் மாறியிருந்திருக்கும் என ஒரு நேர்க்காணலிலும் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்த அவர், ’தெக்கத்தி பொண்ணு’, ’வம்சம், ’யமுனா’ ஆகிய சீரியல்களில் நடித்தார். அதோடு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘அரண்மனைகிளி’ தொடரிலும் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்தார்.

கணவருக்கு முன்பே சினிமாவில் முகம் காட்டியவர்.. ரோபா சங்கர் மனைவி பிரியங்காவின் அறிமுகம்!

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரகதி, பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்து விட்டு, கல்லூரிப் படிக்கை சென்னையில் முடித்தார். தற்போது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். நடனத்தில் ஆர்வம் மிகுந்த பிரகதி தனது மகனுடன் இணைந்து, ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது ’அரபிக் கடலோரம்’ பாடலுக்கு அவர் ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது. 44 வயதில் பிரகதியின் உற்சாக நடனம் பலருக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tamil serial news vijay tv pragathi viral dance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X