வி.ஜே, துணை நடிகை, ஹீரோயின் – விஜய் டிவி ரம்யாவின் பக்கா பிளான்

Vijay TV VJ Ramya: வடிவமைப்பாளர்கள் வடிவமைத்து தரும் உடைகளை அணிந்துக் கொள்வதில்தான் தனக்கு அலாதி பிரியம் என்றும் கூறி இருக்கார் ரம்யா.

By: Updated: April 18, 2020, 07:44:13 PM

Tamil TV Anchor VJ Ramya : விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா, டிடி காலத்து ஆள். என்னவோ டிடி மட்டும்தான் அந்த காலத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாதிரி சொல்லி வருகிறார்கள். டிடி 10-ம் வகுப்பு படிக்கும்போதே படிப்பு ஒரு பக்கம், விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பு ஒரு பக்கம் என்று முன்னேறிக் கொண்டே வந்தார். இவர் விஜய் டிவிக்கு வந்த ஓரிரண்டு வருடத்தில் ரம்யா நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்தார். வந்த வேகத்தில் ஜெகனுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் மிகவும் பிரபலம் ஆனார்.

லட்சுமி ஸ்டோர்ஸ்: சீரியல் டூ சினிமா ஹீரோயின் நக்‌ஷத்ரா

விஜய் டிவியின் இரண்டு கண்கள் போல ரம்யாவும், டிடியும் நிகழ்ச்சிகளை மாறி மாறி தொகுத்து வழங்கி வந்தனர். ரசிகர்கள் மனதிலும் நல்ல இடத்தை பிடித்து இருந்த ரம்யா, டிடி இருவரும் அடுத்தடுத்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் செய்த வேகத்திலேயே ரம்யாவுக்கு விவாகரத்து நடந்தது. டிடி-க்கு ஒரு வருடம் கழித்து நடந்தது.


டிடி இப்போதும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறார். ரம்யா விஜய் டிவியை விட்டு வெகு தூரம் விலகிப்போயிருக்கார். இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பி எத்தனையோ வருடங்கள் ஆன நிலையிலும், சினிமா துறை தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது, ஆடியோ லான்ச் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது என்று பயணம் தொடர்கிறது.

சினிமாவில் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யாவுக்கு அடுத்து ஒரு ஹீரோயின் சான்ஸ் வந்த நிலையில், பொசுக்கென்று லாக்டவுன் அமலுக்கு வந்துவிட்டது. தன்னை மெருகேற்றிக்கொள்ளும் பணிகளில் ரம்யா தீவிரமாக இறங்கி இருக்கார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த போதும் சரி, இப்போது சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளபோதும் சரி,  வடிவமைப்பாளர் வடிவமைத்து தரும் வித விதமான உடைகளில்தான் பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காட்சி அளிப்பார்.

பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் பார்த்த எழுத்தாளர்!

வடிவமைப்பாளர்கள் வடிவமைத்து தரும் உடைகளை அணிந்துக் கொள்வதில்தான் தனக்கு அலாதி பிரியம் என்றும் கூறி இருக்கார் ரம்யா. ஆனால், சினிமாவில் நடிக்கத் துவங்கி விட்டால், நடிக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்பத்தான் உடைகள் அணிய வேண்டும். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அணிந்துக்கொள்ளும் ஆடம்பர உடைகளுக்கு சினிமாவில் வேலையே இல்லை. இதை ரம்யா உணராமலா இருப்பார். இப்போ வேற லெவலில், தனது இன்ஸ்டா பக்கங்களில் நீச்சல் உடைகள், கவர்ச்சி உடைகள் அணிந்த போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tamil television news vijay tv vj ramya

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X