Advertisment

குழந்தைகளை பாதிக்கும் சர்க்கரை நோய் : பாதுகாப்பது எப்படி? கோவையில் விழிப்புணர்வு பேரணி

சர்க்கரை நோய் குறித்து போதுமான விழிப்புணர்வின்றி மருந்துகளை உட்கொள்ளாததால், சிறுவயதிலேயே சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore Diabetes

குழந்தைகளை பாதிக்கும் டைப் 1 சர்க்கரை நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புண்ர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு கிட்டத்தான் நிகழ்ச்சியியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Advertisment

இந்தியாவில் குழந்தைகளுக்கான டைப் 1 நீரிழிவு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் 20 ஆயிரம் குழந்தைகளுக்கும் இந்திய அளவில் 5 லட்சம் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு இருக்கின்றன. 7 மாத குழந்தைகள் முதல் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 1 சதவீதம் பேர் நீரிழிவு நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

diabetes awarness

போதுமான விழிப்புணர்வின்றி மருந்துகளை உட்கொள்ளாததால், சிறுவயதிலேயே சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு  உள்ளாகின்றனர். குழந்தைகள் எடை குறைந்து உடல் மெலிய ஆரம்பித்து, குழந்தைகளின் உடலில் ஆட்டோ இம்யூன் டிசீஸ் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகளின் கணையம் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரபி செயல்பாடு தடைபடுகின்றன.

இந்த பதிப்பு உள்ள குழந்தைகளுக்கு தினமும் 4"முறை இன்சுலின் மருத்து செலுத்த வேண்டும். முறையாக மருந்துகள் உட்கொண்டால் குழந்தைகள் உடல் நலம் பேணி, வழக்கமான வாழ்கை நடைமுறையில் பயணிக்க முடியும். ஆனால் அதுகுறித்து விழிப்புணர்வு பெற்றோரிடம் இல்லை.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் முதன் முறையாக குழந்தைகள் முன்னிலைப்படுத்தி நடைபெற்ற "கிட்ஸ் வாக்கத்தான் - கிட்டத்தான் 2023" விழிப்புணர்வு நிகழ்ச்சி தன்னாரலர்கள் முன்னெடுப்பில் நடத்தப்பட்டிருக்கின்றன. கோவை பந்தைய சாலை தாமஸ் பார்க்கில், கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 150 குழந்தைகள் உட்பட, ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

diabetes awarness

பந்தைய சாலை மீடியா டவரில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு, பந்தய சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது. இதில் பங்கேற்ற அனைவரும் நீல நிற தொப்பி, உடை மற்றும் பதாகைகளை ஏந்தி நடந்து சென்று சிறார் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு குறித்து மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன்  கூறுகையில், ஐ.சி.எம்.ஆர் 2022 ல் தனது தேசிய ஆய்வின் படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 15,000 பேர் புதிய வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கம் வேகமாக  அதிகரித்து உள்ளது.  டைப் 1"நீரிழிவு நோய் இளம் நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது.

இது கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது குழந்தைகளில் ஏற்படும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், காலப்போக்கில் இதயம், இரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும், நாள்பட்ட பிரச்சினைகள் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும். சிகிச்சை பெறும் ஒரு குழந்தையும் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.

diabetes awarness

டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் உள்ள மெட்ரோ டைனமிக்ஸின் ரோட்டரி இ-கிளப் மற்றும் இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து, 'கிடாத்தான் 2023' என்ற வாக்கத்தானை கோவையில் முதன் முதலாக நடத்தியுள்ளோம். இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விழிப்புணர்வு வாகத்தான் நடத்தப்படும் என்றும், அறக்கட்டளையுடன் இணைந்து பல்வேறு முயற்சிகள் மூலம் சுமார் 1 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி 'சிறார் நீரிழிவு உபகரணங்களை' வழங்கியுள்ளோம். இது சிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பல இளம் குழந்தைகளின் வாழ்க்கைக்கு  உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

Diabetes health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment