Tasty healthy Protein-rich loaves of bread : பிரட் என்பது சில செயல்முறைகளுக்கு பின் கிடைக்கப்படும் உணவு. எனவே அதனை பெரிதும் விரும்பி யாரும் சாப்பிடமாட்டார்கள். தானியங்களை செயல்முறைகளுக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுவதால் இவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது.
மேலும் இது உடல் எடையை குறைப்பதுடன் சில உடல் உபாதைகளையும் உருவாக்கி விடும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரட் சாப்பிடுவதால் உடலில் இரத்த சர்க்கரை, உடல் பருமன் மற்றும் செரிமான கோளாறுகள் போன்றன ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் முழு தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிரட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கும்.
Tasty healthy Protein-rich loaves of bread
லோ-கார்ப் டயட்டை பின்பற்றுபவர் இந்த முழு தானியங்கள் சேர்க்கப்பட்ட பிரட்டை சாப்பிட வேண்டாம். ஆனால் இவற்றில் நார்ச்சத்து, புரதம் ஆகியவை அதிகமாக உள்ளது. முழுதானியங்கள் நிறைந்த சில பிரட் வகைகளை பார்ப்போம்.
ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. ஓட்ஸில் நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கிறது. ஓட்ஸ் பிரட் தயாரிக்கும்போது முழு கோதுமை மாவு கொண்டு தயாரிக்கலாம்.
ஃகுயினா பிரட்:
க்ளூட்டன் ஃப்ரீ மாவில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது. நாமே இதை வீட்டில் தயாரிக்கலாம்.
கம்பு பிரட்:
கம்பில் இரும்பு சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. 100 கிராம் கம்பில் 9 கிராம் புரதம் இருக்கிறது.
ஃப்ளாக்ஸ் பிரட்:
ஃப்ளாக்ஸ் பிரட், ஆளி விதையில் புரதம் அதிகமாக இருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆளி விதை கொண்டு பேக் செய்யப்படும் பிரட்டில் நார்சத்தும் நிறைந்துள்ளது.
இப்படி புரதம் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்கும் பிரட் வகைகள் ஏராளமாக உள்ளது. எனவே வீட்டிலேயே இதுபோன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை கொண்டு பிரட் தயாரிக்கலாம்.
மேலும் படிக்க : காலை உணவில் வித விதமான ஆம்லேட்!