டீ பிரியர்கள் கவனத்திற்கு… கலப்படமான தேயிலை கண்டுபிடிக்க இதுதான் ரகசியம்!

Simple Test By FSSAI To Find Out Tea Leaves Adulterated Tamil News: தேயிலையில் பொதுவாக தீர்ந்துபோன அல்லது நாள்பட்ட தேயிலை இலைகள் மற்றும் வண்ணமயமான பொருட்கள் தான் கலப்பட பொருட்களாக இருக்கும்.

Tea recipe tamil: simple steps to find out adulterated tea

Tea adulteration test in tamil: தேநீர் (டீ) நம்மில் பலரின் எனெர்ஜி பானமாக உள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேயிலை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுவதால், சரியான அளவு டீ உண்மையில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது கொழுப்பைக் குறைப்பது மற்றும் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு தொடர்புடையது.

ஆனால், நாம் விரும்பி பாரும் டீ-யின் தேயிலையில் கலப்படம் செய்யும்போது, ​​அதன் ஆரோக்கிய நன்மைகள் ஒரே மாதிரியாக இருக்காது. எந்தப் பொருளைக் கலப்படம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அது உங்கள் ஆரோக்கியத்திற்குக் கூட தீங்கு விளைவிக்கும்.

தேயிலையில் பொதுவாக தீர்ந்துபோன அல்லது நாள்பட்ட தேயிலை இலைகள் மற்றும் வண்ணமயமான பொருட்கள் தான் கலப்பட பொருட்களாக இருக்கும். இவை கல்லீரல் கோளாறுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளின் ஆபத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வழக்கமான கலப்படங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வழி குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிடுகிறது. தீர்ந்துபோன தேயிலை இலைகளுடன் தேநீரில் கலப்படம் செய்வதை சரிபார்ப்பது குறித்த சமீபத்திய வீடியோ ஒன்றை அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.

தீர்ந்துபோன இலைகளுடன் உங்கள் தேநீரில் கலப்படம் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்கான எளிய படிகளை இங்கு பார்க்கலாம்.

முதலில் வடிகட்டி காகிதத்தை (filter paper) எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு தேயிலை இலைகளை வடிகட்டி காகிதத்தில் பரப்பவும்.

வடிகட்டி காகிதத்தை ஈரமாக்குவதற்கு தண்ணீரில் தெளிக்கவும்.

இப்போது வடிகட்டி காகிதத்தை நீரில் கழுவவும்.

பின்னர் வடிகட்டி காகிதத்தில் வெளிச்சத்திற்கு எதிராக கறைகளை கவனிக்கவும்.

கலப்படமில்லாத தேயிலை இலைகளுடன் வடிகட்டி காகிதத்தில் கறை காணப்படாது.

கலப்பட தேயிலை இலைகளைக் கொண்ட வடிகட்டி காகிதத்தில் கருப்பு பழுப்பு நிற திரிபு இருக்கும்.

இப்படி இந்த எளிய சோதனையைபயன்படுத்தி தேயிலையில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tea recipe tamil simple steps to find out adulterated tea

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com