கஞ்சிக்கு ஏற்ற கதம்ப துவையல்… இஞ்சி, மல்லி, புதினா சேத்து இப்படி செஞ்சு பாருங்க!

Kathamba Thuvayal making in tamil: இந்த டேஸ்டியான கதம்ப துவையலை கஞ்சி, தோசை, இட்லி, சாதம் மற்றும் பிற உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.

Thuvayal recipes in tamil: Kadamba chutney recipe in tamil

Thuvayal recipes in tamil: கதம்ப துவையல் என்பது செட்டிநாடு வகை சட்னி ஆகும். தமிழில் கதம்பம் என்றால் கலந்தது என்று பொருள். இந்த துவையல் செய்முறைக்கு நாம் அரைத்த தேங்காய், உலர்ந்த சிவப்பு மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு போன்ற பொருட்களை சேர்க்கிறோம். இதனால் தான் இது கதம்ப துவையல் அல்லது கதம்ப சட்னி என அழைக்கப்படுகிறது. இந்த டேஸ்டியான கதம்ப துவையலை கஞ்சி, தோசை, இட்லி, சாதம் மற்றும் பிற உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.

கதம்ப துவையல் செய்யத் தேவையான பொருட்கள்:-

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சமையல் கடலை பருப்பு – 1tbsp
கடுகு – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 20
பெருங்காயம் கட்டி – 4
சின்ன வெங்காயம் – 80 கிராம்
பூண்டு பல்லு – 4
இஞ்சி துண்டுகள் – 5 கிராம்
தக்காளி – 100 கிராம்
புளி – 3 கிராம்
தேங்காய் துருவல் – 50 கிராம்
வரமிளகாய் – 6
மல்லி தழை – 25 கிராம்
புதினா தழை – 25 கிராம்
கல் உப்பு – 4 கிராம்

கதம்ப துவையல் செய்முறை:-

முதலில் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கடுகு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் 4 முதல் 5 நிமிடங்கள் இடைவெளியில் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் நன்கு வதக்கிய பின் கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி தனியாக ஆற வைக்கவும்.

பிறகு, அவற்றில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் அம்மியிலோ அல்லது மிக்சியிலோ இட்டு அரைக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்ப்பார்த்த கதம்ப துவையல் ரெடியாக இருக்கும் அவற்றை உங்களுக்கு விருப்பமான உணவுகளுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thuvayal recipes in tamil kadamba chutney recipe in tamil

Next Story
Independence Day 2021 : 75-வது சுதந்திர தினம் – தேசப்பற்றை தூண்டும் வாழ்த்துகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express