Advertisment

சம்மர் சீசன் ஆரம்பம்... வேர்க்குருவை எப்படியெல்லாம் தடுக்கலாம்???

வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் ஒரே வாரத்தில் வேர்க்குரு பறந்து விடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சம்மர் சீசன் ஆரம்பம்...  வேர்க்குருவை  எப்படியெல்லாம் தடுக்கலாம்???

அக்னி வெயில் தொடங்கும் முன்னே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. காலை 10 மணிக்கே நடு வெயில் மண்டையை பொளக்கிறது. சாலையில் அனல் கொதிக்கிறது. வியர்வை, வேர்க்குரு, எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு, வறண்ட சருமம் என்று ஒருபக்கம்  உடல் சார்ந்த பிரச்சனைகள் எழ தொடங்கியுள்ளன.

Advertisment

பெரும்பாலான நோய்கள் கோடையில் தான் உருவாகின்றன.கடும் கோடையிலிருந்து நம்மை காத்துக் கொள்ள ஜில்லுன்னு சில யோசனைகள் செய்தாலே போதும் வெயிலையும் விரட்டியடிக்கலாம்.  ஆனால் குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் அப்படி எந்தவித  டிப்ஸை உடனே அளிக்க முடியாது, காரணம் அதிகப்படியான வெயில், அதிகப்படியான வெயில் இவை இரண்டையுமே அவர்களால் தாக்க பிடிக்க முடியாது.

வெயில் காலத்தில் சோர்வு, தாகம், பித்தம், சரும சுருக்கம், வேர்க்குரு, தோல் கறுத்து போவது, பசியின்மை, போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை, கோபம், பொறுமையின்மை போன்ற மனப்பிரச்சினைகளையும் உருவாக்கிவிடும். எனவே முடிந்த வரை காலை 11 மணிக்குள் மேல் வெயிலில் செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.   சம்மரில் அனைத்து விதமான பிரச்சனைகள் வந்தாலும்,  எல்லாருக்கும் மிகவும் அவஸ்தையை தருவது எதுவென்றால் அது  வேர்க்குரு தொல்லை தான்.

வரும் முன் காப்பது போல் ஆரம்பத்திலியே வேர்க்குருவை விரட்டும் வழிகள்:

1. சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்து,  அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் ஒரே வாரத்தில் வேர்க்குரு பறந்து விடும்.

2. பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடங்களின் மீது போர்ர்த்தி எடுக்க வேண்டும்.

3. வியர்வை அதிகமாக உள்ள பெண்கள் சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் பூசி வந்தாலே போதும்.

4.  வேப்பிலைகளை எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு மை போன்று விழுதாக அரைத்துக் கொள்ளவும். இவ்விழுதினை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும்.

5. மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாக இருப்பது ஐஸ்கட்டி ஆகும். வேர்க்குரு உள்ள சருமத்தின் மீது ஐஸ்கட்டிகளைக் கொண்டு தேய்க்கவும்.

6. கற்றாழையின்  ஜெல் போன்ற பசையை வேர்க்குருவின் மீது தடவவும். இந்த பசையைப் பூசி, சிறிது நேரத்திற்கு உலரவிடவும். அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்து நன்கு அலசி விடவும்.

Health Tips Summer Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment