ஆரோக்கியமான சிறுநீகம் குறித்தும், சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் விளக்குகிறார். நம் சிறுநீரகங்களை முடிந்தவரை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிகளையும் அவர் விளக்குகிறார். இதுகுறித்து அவர் குமுதம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். வயதானவர்களை தொடர்ந்து தற்போதைய உணவு பழக்கத்தால் இளைஞர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. எனவே, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, வாழ்க்கை முறையுடன், உணவு முறையிலும் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
இவ்வாறாக சிறுநீரக பாதிப்பின் சில முக்கியமான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.
குழந்தையின்மை: குழந்தையின்மைக்கு சீறுநீரக பிரச்சனையும் ஒரு காரணம். முக்கிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதுவும் ஒரு காரணமாகும்.
குமட்டல்: வாந்தி, விக்கல், சாப்பாடு பிடிக்காததும் சிறுநீரக கோளாறின் அறிகுறிதான். கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சினைகள் செரிமானக் கோளாறுகளால் ஏற்படக் கூடியவை தான். ஆனால் இந்த செரிமானக் கோளாறுகளுக்கும் சிறுநீரக பாதிப்புகளுக்கும் தொடர்பு உள்ளது.
மூச்சு வாங்குதல் - நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளில் மார்புப் பகுதியில் வலியும் மூச்சுத் திணறல் பிரச்சினையும் உண்டாகலாம்.
கை கால் வீக்கம் - பயணத்தின் போது கை கால் வீக்கம். பாதங்கள் மற்றும் குதிகால் சுற்றி வீக்கம் இருப்பது, சிறுநீரக செயலிழப்புக்கு அறிகுறியாக இருக்கலாம்.
இந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க |Dr. P. Soundarajan about Kidney health
அதேபோல சிறுநீரக பாதிப்பு தற்காலிக மற்றும் நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு என இருவகையாக உள்ளது. தற்காலிக செயல் இழப்பு காய்ச்சல் போன்றவற்றால் ஏற்படும். நிரந்தர சிறுநீரக செயல் இழப்புக்கு முக்கிய காரணம் நீரிழிவு, இரத்த கொதிப்பு, சிறுநீரக அழற்சி நோய்கள் போன்றவையாகும்.
சிறுநீரக செயல் இழப்பை கண்டறிய மூன்று முக்கிய பரிசோதனைகளும் உண்டு.
1. சிறுநீர் பரிசோதனை
2. அடிவயிற்று அல்ட்ராசவுண்ட்
3. இரத்த யூரியா கிரியேட்டினின்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.