அசிடிட்டி மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுபட இந்த ஐந்து குறிப்புகளைப் பின்பற்றுங்கள்!

Tips to prevent acidity bloating and constipation Tamil News உங்கள் மதிய உணவை ½ வாழைப்பழத்துடன் நிறைவு செய்யவும்.

Tips to prevent acidity bloating and constipation Tamil News
Tips to prevent acidity bloating and constipation Tamil News

Tips to prevent acidity bloating and constipation Tamil News : தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா மட்டுமல்ல, பண்டிகை விருந்து, ஆடம்பரமான உணவு, வறுத்த உணவு, இனிப்புகள் மற்றும் பல பதார்த்தங்களை உண்டு மகிழும் நாளும்கூட. இதனால் அசிடிட்டி அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதைத் தடுக்க இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

நீங்கள் அசிடிட்டி, வீக்கம் அல்லது மலச்சிக்கல் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தீபாவளியின் போது செய்ய வேண்டிய ஐந்து எளிய விஷயங்கள் இதுதான்…

*அருமையான குல்கந்த் தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். குல்கந்த், ரோஜா இதழ்களின் இனிப்பு வகை. அதன் குளிர்ச்சி மற்றும் பிட்டா, குடலை அமைதிப்படுத்தும் பண்புகளுக்குப் பெயர் பெற்றது.

  • நண்பகலில் 15 நிமிட உறக்கம்.

*உங்கள் மதிய உணவை ½ வாழைப்பழத்துடன் நிறைவு செய்யவும்.

*மாலையில் 2-5 நிமிடங்கள் சுப்த பாத கோனாசனத்தில் படுக்கவும். இதனை Reclining Bound Angle Pose என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் வயிற்று உறுப்புகள் மற்றும் இதயத்தைத் தூண்டுகிறது. மேலும், ஒட்டுமொத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உட்புற தொடைகள், இடுப்பு மற்றும் முழங்கால்களை ஸ்ட்ரெட்ச் செய்ய உதவுகிறது. ஒரு நிபுணரின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆசனத்தை ஆரம்பநிலையாளர்கள் செய்ய வேண்டும்.

*இரவு உணவிற்கு நெய்யுடன் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். புரோபயாடிக் கஞ்சி உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tips to prevent acidity bloating and constipation tamil news

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com