tirupati balaji temple: ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
Advertisment
கொரோனா ஊரடங்கு காரணமாக 83 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த திருப்பதி கோயில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஜூன் 8 ஆம் தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகே தற்போது திருப்பதி நடை திறக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியாக டிக்கெட் புக் செய்யப்பட்டு பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து வரவேண்டும். பக்தர்கள் 6 அடி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மத்திய மாநில அரசுகளின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல கோவிலுக்கு வரும் பக்தர்களை தனிமனித இடைவெளியுடன் கையாளுவதற்காக திருமலையில் பணியாற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
Advertisment
Advertisements
அந்த வகையில், திருப்பதி மாநகர எஸ்பி ரமேஷ் ரெட்டி புதிய வழிமுறையை திருமலையில் கொண்டு வந்துள்ளார். No Horn zone அதாவது திருமலையில் இனி வாகனங்கள் ஹாரன் அடிக்கக் கூடாது.
திருப்பதி செல்லும் மலைப்பாதையில் வாகனங்களில் செல்பவர்கள் தேவையின்றி ஹாரன் அடிக்காமல் இடைவெளி விட்டு அமைதியாக சென்று வர வேண்டும் . அதிகளவில் காற்று மாசுபடுதல் மற்றும் ஒலி மாசுபடுதை தடுக்கும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பை கையில் எடுத்துள்ளார் திருப்பதி மாநகர எஸ்பி ரமேஷ் ரெட்டி.
தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களும் இந்த வழிமுறையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதில் சிவப்பு எச்சரிக்கை பகுதியிலிருக்கும் பக்தர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். தேவஸ்தானம் சார்பில் சிறந்த முறையில் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும் பாதைகளில் தனிமனித இடைவெளியுடன் நடப்பதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி தரிசனம் செய்யலாம். இதற்கு முன் இருந்ததுபோல பக்தர்களை தள்ளிவிடுவது போன்ற எந்தவித தொந்தரவும் பக்தர்களுக்கு இருக்காது” என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil