tirupati darshan booking online : இந்தியாவின் மிகப்பெரிய தெய்வீக ஸ்தலம் என்றால் அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த அளவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்திய அளவில் பிரசித்தமான ஒரு கோவிலாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்று.
இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.வெளிமாநிலங்களில் இருந்தும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் வேண்டுதல், தரிசனம், திருமணம் போன்றவற்றிற்காக திருப்பதி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
கொரோனாவுக்கு முன்பு வரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் திருப்பதி சென்று வந்தனர்.இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழிப்பாட்டு தளங்கள் மூடப்பட்ட போது திருப்பதியும் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வழிப்பாட்டு தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சுமார் 80 நாட்களுக்கு பிறகு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படுகிறது.
பக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது!
tirupati darshan booking online ஆன்லைன் முன்பதிவு:
திருப்பதி செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமே ஏழுமலையான் தரிசினத்திற்கு டிக்கெட் பெற முடியும். tirupati balaji ap gov in என்ற இணையதளத்தை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம்.
- தினசரி 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தரிசனம் செய்ய அனுமதி பெறும் டிக்கெட்டுகளுடன் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் பக்தர்கள் செய்துக் கொள்ளலாம்.
- கொரோனா தொற்று அதிகமாக உள்ள சிவப்பு நிற மண்டலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. காலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
- ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற மாநில பக்தர்கள் தங்கள் மாநில அரசிடம் இருந்து இ-பாஸ் பெற வேண்டும்.
- தரிசனம் பெற விரும்புவோருக்கு எம்.எம்.எஸ் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.
- ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் 932103330 க்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். டிடிடி (இடைவெளி) கோயில் (இடம்) தேதி (இடம்) நபர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”