பக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது!

10 வயதுக்குட்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

tirupati temple open : ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி சென்று வந்தனர். ஆனால், கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய பின்பு அனைத்து வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் போது திருப்பதி கோவிலின் நடையும் சாத்தப்பட்டது.

சென்ற ஆண்டு ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்ற்த்திற்கு பிறகு அதன் பிரதிபலிப்பு திருப்பதியில் தெரிய தொடங்கியது. விஜபி தரிசனம் தொடங்கி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதில் அனைத்து மாற்றங்களும் நடைமுறக்கு வந்தன. முன்பை விட ஏழுமலையானை தரிசிப்பது மிகவும் சுலபமாக்கப்பட்டது.ஆனால் பக்தர்கள் செல்லாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தான் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு திருப்பதி கோயில் தயாராகி விட்டது. வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 11 ஆம்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதியை பார்க்க கிளம்புங்கடா டோய் – 11ம் தேதி முதல் அனைவருக்கும் அனுமதி

சுமார் 83 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை பிராதிக்க செல்பவர்கள் கீழே குறிப்பிடும் அனைத்து நிபந்தனைகளையும் மறவாதீர்கள். என்னென்ன வேண்டுதல்களை செய்யலாம் என்பதையும் தெரிந்துக் கொண்டு செல்லுங்கள்.

tirupati temple open : வழிமுறைகள்!

1. 11 ஆம் தேதி பொது தரிசனத்தின் போது 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

2. அதே போல் கொரோனா தொற்று அதிகமாக உள்ள சிவப்பு நிற மண்டலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

3. காலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

4. அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அரசு பஸ்கள், இதர வாகனங்களை இயக்க அனுமதி.

5. ஒரு நாளில் மொத்தம் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

6. தினமும் காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணிவரை வி.ஐ.பி.தரிசனம்.

7. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற மாநில பக்தர்கள் தங்கள் மாநில அரசிடம் இருந்து இ-பாஸ் பெற்று வருவது கட்டாயம்.

8. உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே கோயில் உள்ளே செல்ல பக்தர்களுக்கு அனுமதி.ருவோர் கட்டாயம் முக கவசம், கையுறை அணிய வேண்டும்.

9. பக்தர்கள் மொட்டை போட அனுமதி இல்லை. கோவிலில் பக்தர்கள் 6 அடி தூர சமூக விலகலை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close