tirupati darshan timings : ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம் செல்வோர் திருமலையில் உள்ள கோவிலுக்கு நேரில் செல்ல வேண்டும். ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்ற்த்திற்கு பிறகு அதன் பிரதிபலிப்பு திருப்பதியில் தெரிய தொடங்கியது. விஜபி தரிசனம் தொடங்கி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதில் அனைத்து மாற்றங்களும் நடைமுறக்கு வந்துள்ளன.
இனிமேல் அவசர அவசரமாக குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டு அடிச்சி பிடித்து ஓடி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. ஆன்லைன் புக்கிங் தொடங்கி தரிசின நேர என அனைத்து ஈஸியான சேவைகளும் நடைமுறைக்கு வந்து விட்டன.
tirupati darshan timings : தமிழக பக்தர்கர்களுக்கு மிகப் பெரிய வசதி!
திருப்பதி தரிசனத்தை எடுத்துக் கொண்டால் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழக பக்தர்கள் தான் அதிகம் சென்று வருகின்றனர். இங்கிருந்து குடும்பத்துடன் செல்பவர்கள் ஏழுமலையானை தரிசிக்க கூடுதல் நேரம் எடுத்தாலும் கால்கடக்க வரிசையில் நிற்கின்றனர்.
அல்லது ரூம்களில் வாடைக்கு தங்க வைக்கப்படுகின்றன. இருந்த போது கூட்ட நெரிசலில் இடம் இல்லாமல் தவிப்பவர்களும் உண்டு. இந்நிலையில் திருப்பதி செல்லும் தமிழக பக்தர்களுக்காகபுதிய அறிவிப்பாக அவர்கள் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அறங்காவலர் குழு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட எம்எல்ஏ குமரகுரு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக, 31 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ-வுமான குமரகுரு, அறங்காவலர் குழு உறுப்பினராக பதவியேற்றார். பதவியேற்புக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஏழை எளிய பக்தர்களும் சுலபமாக சாமி தரிசனம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வேன் என உறுதி அளித்தார்.
மேலும், தமிழக அரசின் சார்பில் திருப்பதியில் விருந்தினர் மாளிகை கட்ட, முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.