tirupati devasthanam booking : ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இருந்தும் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக ஒய் .வி.சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திருமலை தேவஸ்தானத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையானை தேடி வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கே முன்னுரிமை என்று ஏற்கனவே டெட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது திருப்பதியில் காலம்காலமாக இருந்து வந்த விஜபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.
இதுவரை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வரும் விஜபி தரிசனம் முறையே எல் – 1, எல் – 2, எல் – 3 ஆகியவை நடைமுறையில் இருந்து தூக்கப்பட்டனர். இதற்கு 500 ரூ முதல் 1500 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது ஆனால் இனிமே அப்படி இல்லை. அனைத்து பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.
திருப்பதியில் நடைமுறைக்கு வரும் புதிய விஐபி டிக்கெட் முறை!
அந்த வகையில் இந்த திடீர் மாற்றத்தால் கடந்த மாதத்தில் மட்டும் பக்தர்கள் எண்ணிக்கை 5000 வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இருந்ததை விட எளிமையாக பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருவதாக தேவஸ்தான போர்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust) இந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் என்ற புதிய நடைமுறை பல்வேறு சிறப்பு வசதிகளுக்கு வழிவகுக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழா :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.பிரம்மோற்சவ விழாவையொட்டி, தினமும் காலை 9 மணியில் இருந்து, பகல் 11 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் வாகன வீதி உலா நடக்கிறது. கருட வாகன வீதிஉலா (கருட சேவை) இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணி வரை நடக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.