tirupati online : ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரசத்தி பெற்ற ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
திருமலை திருப்பதிக்கு, ஒரு நாளைக்கு 60,000 முதல் 80,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில், இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கும். இவர்களுக்கு, உணவு, குடிநீர் , போக்குவரத்து, தங்கும் அறைகள், லாக்கர் வசதிகள், முடி இறக்குவதற்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக ஒய் .வி.சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திருமலை தேவஸ்தானத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு மிகச் சிறந்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கண்டிப்பாக சந்தோஷத்தை ஏற்படுத்தும். அதாவது, எப்போதுமே திருப்பதி உண்டியலில் காணிக்கைகள் குவிவது வழக்கமான ஒன்று. உலகில் எந்த ஒரு மூலையில் இருப்பவர்களும் தங்களது வேண்டுதல் நிறைவேறினால் தேடி வந்து உண்டியலில் காணிக்கையை அள்ளி கொட்டுவார்கள்.
திருப்பதி தரிசனம் பக்தர்களுக்கு முக்கியமான நிபந்தனைகள்!
அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2 பேர் சேர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இரு அறக்கட்டளைக்கு மொத்தம் ரூ.14 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர். இருவரும் தங்களை பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
இருவரும் தங்களது காணிக்கையை வரைவோலையாக தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினார்கள். அந்த பக்தர்களுக்கு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளர். தங்களது வேண்டுதலின் பலனாக இந்த நன்கொடையை வழங்கியதாக கூறியுள்ளனர்.