tirupati room booking : ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருடம் போலவே பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது. இந்த முக்கிய விழாவில் கலந்துக் கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கும் வசதிகள் தொடங்கி உணவு என அனைத்து முக்கிய வசதிகளையும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது மட்டுமில்லை எப்போதுமே திருப்பதி செல்லும் பக்தர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாத வகையில் தேவஸ்தானம் போர்டு கீழ் திருப்பதியில் சொகுசு அறைகள் கொண்ட மிகப் பெரிய விடுதியை திறந்து வைத்துள்ளது.
tirupati room booking : திருப்பதியில் சொகுசு அறை!
கீழ் திருப்பதியில் பத்மாவதி தங்கும் விடுதி என்ற பெயரில் 200 அறைகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. அதே போல் சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் போன்று பல தங்கும் விடுதிகளும் நவீன வசதியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம்.
மேல்திருப்பதியில் மாத்ருஶ்ரீ வகுளமாதா ரெஸ்ட் ஹவுஸ் என்ற தங்கும் விடுதியும் புதியதாக திறக்கப்பட்டுள்ளது. இதில் 1,400 பக்தர்கள் தங்கும் விதமாக 54 அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இருக்கும் வசதிகள்:
ஒரே நேரத்தில் 1,800 பக்தர்கள் இந்த விடுதியில் தங்க முடியும்.
இதில் 80 குளிர்சாதன அறைகளும் உள்ளன.
திருப்பதியில் களைக்கட்டும் பிரம்மோற்சவ விழா.. ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிப்பது எப்படி?
200 அறைகளுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.120 சாதாரண அறைகள் உள்ளன.ஆன்மிக நூல்கள் அடங்கிய மிகப்பெரிய நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.