/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1339.jpg)
TTD To Link Tirupati Temple VIP Break Darshan Tickets To Donation - 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான்! திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்!
Tirupati Temple VIP Break Darshan: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அமல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறி இருந்தார். இதனையடுத்து தற்போது கொண்டு வரப்பட உள்ள புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க - திருப்பதி செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..விஜபி தரிசனம் முதல் சிபாரிசு கடிதம் வரை அனைத்து சலுகையும் ரத்து
புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்ட் The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust), நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது. இந்த டிரஸ்டிற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் என்பது தான் இந்த புதிய முறை. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் தகவலின் படி, இதுவரை இந்த டிரஸ்ட்டில் 25 லட்சம் ரூபாய் வரை நன்கொடை சேர்ந்திருக்கிறது. நன்கொடை அளித்தவர்களின் பெயர்களும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.