tirupati darshan booking : இந்தியாவில் உள்ள திருத்தலங்களுள் புகழ்பெற்றது திருப்பதி. இந்த ஆலயத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மிகவும் நேர்த்தியுடன் பராமரித்துவருகிறது.
திருமலை திருப்பதிக்கு, ஒரு நாளைக்கு 60,000 முதல் 80,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில், இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கும். இவர்களுக்கு, உணவு, குடிநீர் , போக்குவரத்து, தங்கும் அறைகள், லாக்கர் வசதிகள், முடி இறக்குவதற்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
திருப்பதி செல்பவர்கள் நோட் பண்ணிக்கோங்க! ரூம் எடுத்து தங்குவதில் வந்தது சிக்கல்
இத்தனை சிறப்பு வாய்ந்த திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக ஒய் .வி.சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திருமலை தேவஸ்தானத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையானை தேடி வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கே முன்னுரிமை என்று ஏற்கனவே டெட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது திருப்பதியில் காலம்காலமாக இருந்து வந்த விஜபி தரிசனம் கூடிய விரைவில் ரத்தாகிறது.
tirupati l1 l2 l3 darshan booking : வி.ஐ.பி., தரிசன முறை!
இதுவரை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வரும் விஜபி தரிசனம் முறையே எல் - 1, எல் - 2, எல் - 3 ஆகும். ஜனாதிபதி, பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள் போன்றோர், எல் - 1 பிரிவில் தரிசிக்கலாம். அரசின் மூத்த அதிகாரிகள், எல் - 2 பிரிவில் ஏழுமலையானை பார்க்கலாம். வி.ஐ.பி.,கள் மற்றும் திருப்பதி, திருமலை தேவஸ்தான நிர்வாகிகளின் சிபாரிசு கடிதங்களை பெற்றுள்ளவர்கள், எல் - 3 பிரிவில் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
வி.ஐ.பி.,களின் அந்தஸ்துக்கு ஏற்ப, பொது தரிசன வரிசை தடுத்து நிறுத்தப்படும்; வி.ஐ.பி.,கள் நிதானமாக தரிசனம் மேற்கொள்ள வசதியும் ஏற்படுத்தப்படும். இதனால் தர்ம தரிசனம் மற்றும் பிற வரிசைகளில் வருவோர், சில நேரங்களில், அதிகபட்சம், ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் இனிமேல் இந்த நிலை இல்லை. திருப்பதியில் செயல்பட்டு வரும் விஜபி தரிசனங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட இருப்பதாக தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்!