சாப்பிட்ட உடன் தூக்கம் வர... இந்த 3 ஸ்டெப்ஸ் முக்கியம்: டாக்டர் வி. ஆர் அறிவழகன்

நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இரவில் நல்ல தூக்கம் வர இந்த 3 வழிகளை முயற்சி செய்ய அறிவுறுத்துகிறார் மருத்துவர் வி.ஆர். அறிவழகன்.

நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இரவில் நல்ல தூக்கம் வர இந்த 3 வழிகளை முயற்சி செய்ய அறிவுறுத்துகிறார் மருத்துவர் வி.ஆர். அறிவழகன்.

author-image
WebDesk
New Update
best sleep

சாப்பிட்ட உடன் தூக்கம் வர... இந்த 3 ஸ்டெப்ஸ் முக்கியம்: டாக்டர் வி. ஆர் அறிவழகன்

இரவு நன்றாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இதை செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஏராளம். இரவு நன்றாக தூங்கினால் பல நோய்கள் நீங்கும் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இதுவே இரவு சரியாக தூங்காமல் காலையில் தாமதமாக எழுந்தால் பல நோய்கள் வரும். அதனால்தான் எப்போதும் இரவு நன்றாக தூங்கி காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நீங்கள் இரவில் தாமதமாக தூங்கினாளோ (அ) தூங்குவதில் சிரமமாக இருந்தாலும் 3 விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். இரவு படுத்தவுடனே தூங்கி விடுவீர்கள்.

Advertisment

சாப்பிடும் முறை:

இரவில் நீங்கள் சாப்பிடுவது மற்றும் குடிப்பது உங்களது தூக்கத்தை பாதிக்கும். அதாவது நீங்கள் மாலையிலோ அல்லது இரவு தூங்கும் முன் கனமான அல்லது காரமான உணவை சாப்பிட்டால் இரவில் உங்களால் சரியாக தூங்க முடியாது. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதை உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் இரவு தூங்குதில் சிரமம் ஏற்படும். எனவே இரவு 8 மணிக்கு முன்பே உணவை சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். தூங்குவதற்கு முன் லேசான (பைபர்) உணவை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார் மருத்துவர் வி. ஆர் அறிவழகன்

சூடான தண்ணீர் மற்றும் நடைபயிற்சி:

Advertisment
Advertisements

இரவு உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு சூடாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கு பிறகு தண்ணீர் அருந்த கூடாது. இரவு உணவுக்குப் பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். சாப்பிட்ட உடனேயே தூங்குவது செரிமான செயல்முறை மேலும் குறைக்கும் மற்றும் பலவிதமான வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும். தினமும் இப்படி செய்தால் வாயு, வீக்கம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கி இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும் தீவிரம், நேரம் மற்றும் தூரம் குறித்து கவனமாக இருப்பது மிகவும் அவசியம், இல்லையெனில் நீங்கள் அஜீரணம் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் வி. ஆர் அறிவழகன்

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: