Tomato Pappu simple tips in tamil: இந்த சூப்பரான தக்காளி தால் தயார் செய்யும் போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.
Tomato recipes in tamil: காலை - மாலை டிபன்களுக்கு சரியான சைடிஷ் தேடுவது பெரிய வேலையாக இருக்கிறது. அதே சட்னி, சாம்பார் செய்வதால் சாப்பிடுபவர்களுக்கு போரடித்து விடுகிறது. இதனால் நாம் புதிது புதிதாக முயற்சிக்க வேண்டி இருக்கிறது. நீங்களும் வித்தியாசமான டிபன் சைடிஷ் முயற்சிக்க விரும்பவர் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.
Advertisment
இன்று நாம் பார்க்கவுள்ள "தக்காளி தால்" தயார் செய்ய ரொம்பவே ஈஸியாகும். மேலும், சப்பாத்தி மற்றும் தோசைகளுக்கு செம்மையா இருக்கும். இப்போது இவற்றை தயார் செய்வதற்கான சிம்பிள் செய்முறையை பார்க்கலாம்.
தக்காளி தால் செய்யத் தேவையான பொருட்கள் :
மசூர் தால் - 1 கப் தக்காளி - 4 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
தக்காளி தால் சிம்பிள் செய்முறை:
முதலில் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைக்கவும்
பிறகு, தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பின்னர், கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க தொடங்கவும்.
அவற்றுடன் தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, முன்னர் வேக வைத்துள்ள பருப்பில் அப்படியே சேர்க்கவும்.
பிறகு அவற்றுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு கீழே இறக்கவும்.
இந்த சூப்பரான தக்காளி தால் தயார் செய்யும் போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அப்படி இருக்கும். மறக்காமல் நீங்களும் ஒரு முறை முயற்சியுங்கள் மக்களே!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“