Tomato recipes in tamil: தொக்குகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவை உண்டு. அந்த வகையில் தொக்கு வகைகளில் மிகவும் பிரபலமான தொக்காக உள்ள தக்காளி தொக்கிற்கென தனித்துவமான சுவை உள்ளது. கூடவே பூண்டு சேர்ப்பதால் இதன் டேஸ்ட் இன்னுமே அருமையாக உள்ளது என்றால் நிச்சசயம் மிகையாகாது.
இப்படிப்பட்ட சுவைமிக்க பூண்டு தக்காளி தொக்கை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போமா!
செட்டிநாடு ஸ்டைல் பூண்டு தக்காளி தொக்கு தேவையான பொருட்கள்:
தொக்கு மசாலா:-
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 /4 தேக்கரண்டி
பூண்டு விழுது:–
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பூண்டு பல்லு – 150 கிராம்
தக்காளி மற்றும் வரமிளகாய் விழுது:-
தக்காளி – 1 கிலோ
உலர் வரமிளகாய் – 20 கிராம்
காஷ்மீர் மிளகாய் – 20 கிராம்
தொக்கு :-
நல்லெண்ணெய் – 50 கிராம்
கடுகு – 11 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 25
நறுக்கப்பட்ட பூண்டு – 50 கிராம்
புளிச்சாறு – 100 கிராம்
பெருங்காயத்தூள் – 1 / 4 டீ ஸ்பூன்
கல் உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை
தொக்கு மசாலா பொருட்களை ஒரு கடாயில் இட்டு 2 நிமிடங்களுக்கு வறுக்கவும், அவை நன்கு ஆறிய பிறகு அரைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பூண்டை வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் இரண்டு வகையான காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் தக்காளி பேஸ்ட்யை இட்டு 5 நிமிடங்களுக்கு கிளறவும். தொடர்ந்து புளி சாறு சேர்த்து 10 நிமிடங்கள் கிளறவும்.
இதன் பிறகு, பூண்டு விழுது சேர்த்து 10 நிமிடங்கள் கிளறிக் கொள்ளவும். தொடர்ந்து அவற்றை தாளித்த பின்னர் தொக்கு மசாலா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.
அதன் பின்னர், பெருங்காய தூள் சேர்த்து 15 நிமிடங்களுக்கு மிதமான தணலில் சூடேற்றிக் கீழே இறக்கவும்.
இப்போது அவற்றை உங்களது விருப்பமான உணவுகளுடன் பரிமாறி ருசிக்கலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil