5 cooking YouTube Channels Run Women Tamil News: தொன்மையான உணவுகளை கொண்ட கலாச்சாரம் மிகுந்த நாடாக இந்தியா வலம் வருகிறது. இதற்கு ஒவ்வொரு இந்திய மாநிலத்தையும் குறிப்பிட்டு கூறலாம். ஏன்னென்றால், ஒவ்வொரு மாநிலங்களுமே அதன் தனிவமான உணவுப் பழக்கங்களை கொண்டுள்ளன.
இப்படி பல்வேறு உணவு முறைகளை கொண்டுள்ள இந்தியாவில், அந்த உணவுகளை எப்படி எளிய முறையில் சமைத்து ருசிக்கலாம் என்பதை அனைவரது இல்லங்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறனர் யூடியூப் சமையல் வல்லுநர்கள். இவர்கள் தங்களின் யூடியூப் சேனல்கள் வழியாக சமையல் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளோதோடு, எப்படி சமைக்க வேண்டும்?, அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் என்ன? என்பதையும் தெளிவுற விளக்குகிறார்கள்.
அந்த வைகையில், யூடியூப் சேனல் மூலம் இந்திய சமையலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ள டாப் 5 யூடியூப் சேனல்கள் குறித்து இங்கு நாம் பார்க்க உள்ளோம். இதில் சுவாரஷ்யம் என்னவென்றால், இந்த டாப் 5 யூடியூப் சேனல்களை நடத்தி வருபருவர்கள் 40 மற்றும் 50 வயதுடைய பெண்கள். இவ்வுலகில் பல சாதனைகளை நிகழ்த்த வயது ஒன்றும் தடை இல்லை என்பதை இந்த ஐந்து பெண்களும் நிரூபித்து காட்டியுள்ளனர். மேலும், இளம் பெண்களுக்கு புதிய பாதையை உருவாக்கியுள்ளனர்.
இப்போது அவர்கள் குறித்தும் அவர்களது யூடியூப் சேனல் குறித்தும் இங்கு பார்க்கலாம்.
- நிஷா மதுலிகா
62 வயதான நிஷா மதுலிகா, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே சமைக்க ஆரம்பித்த இவர் 2007ம் ஆண்டு தனது வலைப்பதிவில் இந்திய சைவ உணவு வகைகளை எப்படி சமைப்பது என்று எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு, அவர் தனது யூடியூப் சேனலைத் 2011ம் ஆண்டு தொடங்கினார். தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
தனது சேனலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளை தொகுத்து வழங்கியுள்ள நிஷா மதுலிகா, பல்வேறு இணையதளங்களுக்கு உணவு குறித்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவரது செய்முறைத் தேர்வுகள் எவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்தவை என்பதையும், இந்தியா முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை அவர் எவ்வாறு ஈர்த்துள்ளார் என்பதையும் அவரது சேனல் வீடியோக்களே நமக்கு விளக்குகிறது.
நிஷா மதுலிகா கடந்த 2014ல் யூடியூப் டாப் செஃப் விருதை வென்றுள்ளார். 2017ல் சிறந்த யூடியூப் உள்ளடக்க படைப்பாளர் விருதையும் பெற்றுள்ளார்.
2. பாவனா பட்டேல்
பாவனாஸ் கிச்சன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் பாவனா படேல். 43 வயதான இவர் சைவ சமையலுக்கான செய்முறைகளை வழங்குவதில் பிரபலமானவர். இவரது யூடியூப் சேனலை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
தனது டீன் ஏஜ் பருவத்தில் உணவு விரும்பி இருந்த பாவனா திருமணமான பிறகு, எப்படி நுணுக்கமாக சமைக்க வேண்டுமென கற்றுக்கொண்டார். அதன் பிறகு, 2009ல், தனது யூடியூப் சேனலைத் தொடங்கினார். உணவு, ஃபேஷன் மற்றும் பயண உள்ளடக்கம் உள்ளிட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட வீடியோக்களை அவரது சேனலில் பதிவேற்றியுள்ளார்.
பாவனா பட்டேல் மற்றொரு யூடியூப் சேனலையும் தொடங்கியுள்ளார். தேசி விவா என அழைக்கப்படும் இந்த யூடியூப் சேனல் மூலம் தினசரி வ்லோக் மற்றும் வாழ்க்கை முறை வீடியோக்களை வழங்குகிறார்.
இந்தியாவில் பிறந்த பாவனா பட்டேல், அவருக்கு 22 வயதாக இருந்தபோது, அவரும் அவரது கணவரும் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது அவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
3. மஞ்சுளா ஜெயின்
வட இந்தியாவில் ஒரு சைவ குடும்பத்தில் பிறந்த மஞ்சுளா ஜெயின் பிரபல இந்திய பெண் யூடியூபராக அறியப்படுகிறார். இவரது தாயார் சமையலில் அசத்துபவராம். அவருடன் தனது இளமைக்காலத்தை கழித்த மஞ்சுளா சமையல் கலையை கற்றுத் தேர்ந்துள்ளார்.
மேலும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்புகளின் சுவையை சமரசம் செய்யாமல் இருக்க, குறைந்த வகை தாவரங்கள் மற்றும் மூலிகைகள் மூலம் சமைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார்.
மஞ்சுளா தனது பார்வையாளர்களுக்கு இந்திய சைவ சமையலின் நம்பகத்தன்மையை செயல்படுத்தும் எளிய மற்றும் நடைமுறை சமையல் குறிப்புகளை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். சைவ உணவு, பச்சையம் இல்லாத, சூப்கள் மற்றும் சாலட்களுக்கான அவரது சமையல் மிகவும் பிரபலமானது. மேலும் ஃப்யூஷன் ரெசிபிகளையும், உண்மையான இந்திய ரெசிபிகளையும் பகிர்ந்து வருகிறார்.
40 வயதான மஞ்சுளாவின் யூடியூப் சேனலை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
4. பங்கஜ் பதூரியா
பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான மாஸ்டர்செஃப் இந்தியா சீசன் 1ல் (2010) வெற்றியாளராக வாகை சூடியவர் பங்கஜ் பதூரியா. தற்போது தனக்கென ஒரு யூடியூப் சேனலை (மாஸ்டர்செஃப் பங்கஜ் படோரியா) நடத்தி வரும் இவர், 7 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்களை கொண்டுள்ளார்.
50 வயதான பங்கஜ் பதூரியா 16 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். மாஸ்டர்செஃப் இந்தியா ஷோவில் அவர் பங்கேற்பதற்காக தனது ஆசிரியர் பணியை துறந்தவர். இந்நிகழ்ச்சியை வென்ற பிறகு, அவர் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்டார்பிளஸ் நிறுவனத்திற்காக செஃப் பங்கஜ் கா ஜெய்கா, ஜீ கானா கஜானாவுக்கான கிஃபாயாட்டி கிச்சன், ஜீ கானா கஜானாவுக்காக பங்காவுடன் 3 பாடநெறி, ஈடிவிக்கு ரசோய் சே-பங்கஜ் பதூரியா கே சாத் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பங்கஜ் பதூரியா, தனது யூடியூப் சேனலில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது சேனலில் "பேக் கர் கே தேக்" பிளேலிஸ்ட்டை வைத்துள்ளார், அதில் அவர் பேக்கிங் ரெசிபிகள் மற்றும் தந்திரங்களைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும் அவர் தனது சேனலில் சைவ உணவு வகைகளையும் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். சமீபத்தில், ஆரோக்கியமான ரெசிபிகளின் பிளேலிஸ்ட்டையும் தொடங்கியுள்ளார்.
5. ரெஷு ட்ரோலியா
கொல்கத்தாவைச் சேர்ந்த ரெஷு ட்ரோலியா உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிறந்து வளர்ந்தார். இந்திய உணவுகளின் மீது அலாதி பிரியம் கொண்ட இவர் அந்த உணவுகளை தன்னால் எப்போது வேண்டுமானாலும் சமைக்க முடியும் என்று கூறுகிறார்.
"மின்ட்ஸ் ரெசிபிகள்" என்று பெயரிட்டுள்ள அவரது சேனலை 2014ல் தொடங்கினார். இந்த சேனலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்களை கொண்டுள்ளார். மேலும் 847 க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.
ரெஷு ட்ரோலியா, சைவ பேக்கிங் ரெசிபிகளுக்கான சிறந்த யூடியூபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவரது சேனலில், இனிப்புகள் மற்றும் கேக்குகளை பேக்கிங் செய்வதற்கான சமையல் குறிப்புகள், நுட்பங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றைக் காணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.