Advertisment

ஜிம்முக்கு போக நேரமில்லையா? அப்போ 6-6-6 ரூல் நடைபயிற்சியை ஃபாலோ பண்ணுங்க!

நடைபயிற்சியில் மேற்கொள்ளப்படும் 6-6-6 என்ற விதிமுறை, உங்கள் வாழ்க்கை முறையுடன் உடற்பயிற்சியை ஓர் அங்கமாக இணைப்பதற்கு வழிவகுப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
666 Walking

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் வேலை நேரம் ஆகியவற்றால் ஜிம்மிற்கு செல்லவோ அல்லது யோகா பயிற்சிகளுக்கு செல்லவோ பலருக்கு நேரம் இருக்காது. அவர்களுக்கெல்லாம் 6-6-6 என்ற விதிமுறை ஒரு தீர்வாக அமையும். இதனை நீங்கள் சுலபமாக பின்பற்றலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Transform your fitness routine with the 6-6-6 walking rule

 

Advertisment
Advertisement

எளிதாகச் சொன்னால் 6 நிமிடங்கள் வார்ம் அப் செய்து, காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு 60 நிமிடங்கள் நடைபயிற்சி செய்து, 6 நிமிட ஓய்வுடன் இந்த பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். இந்த வகையான நடைபயிற்சி இருதய ஆரோக்கியத்தில் தொடங்கி மனநல ஆரோக்கியம் வரை பல்வேறு நன்மைகளை தருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

"நடைபயிற்சியில் மேற்கொள்ளப்படும் 6-6-6 என்ற விதிமுறை, உங்கள் வாழ்க்கை முறையுடன் உடற்பயிற்சியை ஓர் அங்கமாக இணைப்பதற்கு வழிவகுக்கும். இதன் பின்னணியில் இருக்கும் அறிவியலை புரிந்து கொண்டால், இதில் இருந்து கிடைக்கும் நன்மைகளை உணரலாம்" என உடற்பயிற்சி நிபுணர் மருத்துவர் வஜல்லா ஷ்ரவானி தெரிவித்துள்ளார்.

6 நிமிட வார்ம்-அப் மற்றும் ஓய்வின் நன்மைகள்

"6 நிமிட வார்ம் அப் என்பது உடலை தயார்ப்படுத்திக் கொள்ள உளவியல் ரீதியாகவும் உதவி செய்கிறது. இது உங்கள் இதயத் துடிப்பை படிப்படியாக உயர்த்தி தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வார்ம் அப் செய்வது தசைகளின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கவியல் நடவடிக்கையை அதிகப்படுத்துகிறது. எளிதாக மேற்கொள்ளப்படும் ஆர்ம் சர்கிள்ஸ், லெக் ஸ்கிங்ஸ், டோர்சோ ட்விஸ்ட்ஸ் போன்ற பயிற்சிகளை வார்ம் அப் ஆக செய்யலாம். இறுதியாக நீங்கள் கொடுக்கும் 6 நிமிட ஓய்வு உங்கள் உடலை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவி செய்யும். இருதய துடிப்பையும் இது நிதானத்திற்கு கொண்டு வருகிறது. இவை தசைகளை மீண்டும் பழைய நிலைக்கு திருப்புகிறது" என மருத்துவர் வஜல்லா ஷ்ரவானி குறிப்பிட்டுள்ளார். 

60 நிமிட நடைபயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

இருதய ஆரோக்கியம்: நடைபயிற்சி உங்கள் இருதய தசையை பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

உடல் எடை பராமரிப்பு: 60 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வதால் அதிகளவு கலோரிகளை குறைக்க முடியும். இதன் மூலம் உடல் எடையை பராமரிக்க முடியும். மேலும், கொழுப்பை ஆற்றலாக மாற்ற முடியும்.

எலும்புகளுக்கு ஆரோக்கியம்: தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும், ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உதவுகிறது.

நடைபயிற்சி என்பது உடலுக்கு மட்டுமானது கிடையாது. இதன் மூலம் மனநலனையும் மேம்படுத்த முடியும் என ஆய்வுகள் கூறுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு 6-6-6 நடைபயிற்சி பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Best benefits of walking 10000 steps a day Can walking help you lose weight?
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment