A tourist girl with a backpack or student looking at the Brandenburg Gate in Berlin in Germany.
பயணம்செய்ய விரும்புகிறீர்களா? இப்போது உலகமெங்கும் பயணம்செய்கிறீர்கள் என்றால், மக்களின் பயணமுறைகளில் சில நுட்பமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கவனித்திருக்கமுடியும். நுட்ப மாற்றங்கள், பாதுகாப்பான தங்குமிட வாய்ப்புகள், வருமான அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய பயண ஏற்பாட்டுத் தொழிலுக்கு ஊக்கத்தை அளித்துள்ளன. பெருமளவிலான மக்கள் உலகைச் சுற்றிவரத் தொடங்கியுள்ளதால், பயணமுறைகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் அல்லது அதற்கும் மேலாக, பயணமுறையானது எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
Advertisment
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
செல்ஃபி எனும் தற்படம் எடுத்துக்கொள்வது இப்போது அதிவிருப்பம் ஆகிவிட்டது என சர்வசாதாரணமாக சொல்கிறோம். சுற்றுலா என்றால் தற்படம் எடுத்துதான் ஆகவேண்டுமா? பெரும்பாலானவர்கள் ஆமாம் என்றுதான் சொல்வார்கள். உண்மையில், இலண்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகம், வாசிங்கடனில் உள்ள ஸ்மித்சோனியன் கழகம், நியூயார்க்கில் உள்ள நவீன ஓவிய அருங்காட்சியகம் ஆகியவற்றில் தற்படக் கோல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. ஏனென்றால், இந்தத் தற்படக்காரர்களால் மற்ற பார்வையாளர்கள் காட்சியைப் பார்வையிடுவது பாதிக்கப்படுகிறது. உலக அளவில் தற்படங்கள் எடுத்துக்கொள்வதால் பலவித விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன என்கிற ‘நற்பெயரை’ அவை எடுத்துள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதில்லை.
அதிகமாகும் பெண்களின் தனிப்பயணம்
பெண்கள் சாகசப் பக்கம் திரும்பத் தொடங்கியிருப்பது தனியாகப் பயணம்செல்லும் பெண்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். சில நேரங்களில், ஒத்த எண்ணம் கொண்ட பயண ஆர்வலர்கள் சிறுசிறு குழுக்களாக இணைந்து, ஒரு புதிய இடத்தை நோக்கிப் புறப்படுகிறார்கள். பல பெண்கள் கூடி, அவர்களே தங்களுக்கான ஒரு விடுமுறையைத் திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம், ஒரு மறக்கமுடியாத அனுபவத்திற்கான பாதுகாப்பையும் வசதியையும் இந்த உலகம் அனுமதிக்கத் தொடங்கியுள்ளது எனலாம்.
எல்லாம் இணையத்தில்
இப்போது, உலகத்தின் எந்த இடத்துக்கும் செல்வதற்கான பயணச்சீட்டை, அங்கு தங்கும் விடுதிக்கான முன்பதிவை, ஒரு சொடுக்கில் செய்துவிட முடிகிறது. சுற்றுலா செல்வதற்கு வசதியாக நிறைய ஏற்பாடுகள் இணையத்தின் மூலம் எளிதாகச் செய்துகொள்ளமுடிகிறது. ஒரு காலத்தில் உலகம் தெரியாதவர்கள் எனக் கூறப்பட்டவர்களுக்கு இது பெரும் வழியைத் திறந்துவிட்டுள்ளது. உலகத்தின் எந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கும் எளிமையாகவும் வசதியாகவும் சுற்றுலாசெல்லும்வகையில் பயண ஏற்பாட்டுத் தொழில் மாற்றிக்காட்டியுள்ளது.
குறைந்தசெலவில் வான்பயணம்
இப்போது நிறைய பேர் சுற்றுலா சென்றுவருவதற்கு முக்கிய காரணம், குறைந்த கட்டணத்தில் மாற்றுவழிகளை அளிக்கும் விமான நிறுவனங்களின் வருகைதான். விமான எரிபொருள் செயல்திறன் காரணமாகவே இது சாத்தியம் ஆகியிருக்கிறது.
தன்மை பேணல்
கழிவில்லாத பயணத்திட்டங்கள் மற்றும் நிலைப்புத்தன்மை கொண்ட பயணமுறையைப் பற்றி தீவிரமாகப் பேசப்பட்டுவருகிறது. பசுமையான பயணத்திட்டங்கள் அமைக்கவும் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் பயண ஏற்பாட்டாளர்களிடம் வலியுறுத்தப்படுகிறது. முன்பைவிட, பயணிகளே இப்போது கவனமாக இருக்கிறார்கள். உலகளாவிய பயணத் துறையும் காலநிலை சுற்றுக்கு கூடுதல் பாதகத்தை உண்டாக்குவதில்லை என்பதை உறுதிப்படுத்த அதனளவில் முயன்றுவருகிறது.
பயணச்சீட்டைப் பெறுவது முதல் பொதியைச் சரி பார்ப்பதுவரை, விமான நிலையங்களில் ஒவ்வொன்றுமே தானியக்கச் செயல்பாடாக ஆக்கப்பட்டுள்ளன. ஆகையால், உங்களுக்காக ஊழியர் ஒருவர் வந்து உதவிசெய்யும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டியதில்லை. சில விடுதிகளில் வாடிக்கையாளர்களே அவர்களின் அறைகளை தானியக்கமுறையில் சோதித்துப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது, சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் நம்பிக்கையையும் தற்சார்புத் தன்மையையும் உருவாக்கியிருக்கிறது.
சமூக ஊடகத்தின் ஆற்றல்
இது, சமூக ஊடகம் நமக்கு ஒவ்வொன்றாக சொல்லித்தரும் காலம். ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றிக் கூறுவது, விமர்சிக்க அனுமதிப்பது போன்றவற்றின் மூலம் சமூக ஊடகமானது சுற்றுலாப் பயணிகளுக்காகக் குரல்கொடுக்கிறது.