Turmeric powder tamil news, Turmeric powder teeth cleaning: மஞ்சள் பொடி காலம் காலமாக உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், சடங்குகளின் புனிதப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் பொடி நமது பற்களை பளிசாக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா?
Advertisment
மஞ்சள் பொடி, பேக்கிங் சோடா , சிறிது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை, உங்கள் பல் துலக்கும்பிரஷ் மூலம் தினமும் எல்லா பற்களிலும் படும்படி 2 நிமிடங்கள் நன்கு பல் தேயுங்கள் . இவ்வாறு தினமும் செய்தால் உங்கள் பற்கள் பளிச் பளிச் என்றாகி விடும்.ஈறும் பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.
மஞ்சள் பலவித மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் பல் மற்றும் வாய் தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புண்கள், ஈறு நோய்கள் போன்ற வாய்வழி சுகாதாரப் பயன்பாடுகளையும் மஞ்சள் கொண்டுள்ளது. Molecular Nutrition and Food Research எனும் அறிவியல் நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வின் படி, மஞ்சள் தண்ணீர், மஞ்சள் பேஸ்ட் வாய்வழி சுகாதாரத்தை பேணிக் காக்க உதவுகிறது என்று தெரிவிக்கிறது.