Turmeric Tamil News, Turmeric for immunity, Neem leaf benefits: பாட்டி வைத்தியத்தின் மகத்துவம் அனைவரும் அறிந்ததுதான். இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அதனை வலியுறுத்தி, ஒரு பிரசாரமாக முன்னெடுக்கிறார் அமைச்சர் வேலுமணி. அவரது இந்தப் பிரசாரத்திற்கு கலவையான ரீயாக்ஷன்கள் கிடைத்து வருகின்றன.
தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின், சமூக வலைதளப் பக்கங்கள் தினம் ஒரு தகவல் என்கிற ரீதியில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. சென்னையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்கிற தலைப்பில் சென்னைவாசிகளுக்கு நம்பிக்கையூட்டும் தகவல்களை பொழிந்தார். அவ்வப்போது பொது அறிவுப் போட்டிகள், நோய் விழிப்புணர்வு சர்வே என அது தொடர்ந்தது.
Turmeric for immunity, Neem leaf benefits: மஞ்சள், வேப்பிலை பயன்கள்
செப்டம்பர் 2-ம் தேதி முதல் தினம் ஒரு மருத்துவக் குறிப்பை பதிவு செய்து வருகிறார் அமைச்சர். அந்த வகையில் அமைச்சர் பதிவு செய்திருக்கும் முதல் இரு நாள் பதிவுகள் இங்கே..!
செப் 2: அரை லிட்டர் தண்ணீரில் சில வேப்பிலைகளை போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, வெதுவெதுப்பாக குடிக்கலாம்.
வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து, தினமும் காலையில் விழுங்க, நோயெதிர்ப்பு சக்தியைப் பெறலாம் என்கிறது நம் பாரம்பரியம்.
செப் 3: ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவிபிடித்தல் அவசியம்.
பாலில் கலந்து குடித்தால்/தேனுடன் குழைத்து சாப்பிட்டால் சளி/இருமல் குணமாகும்.
நம் முன்னோர்கள் கண்ட மஞ்சளின் மகிமையை உணர்ந்து வலிமை பெறுவோம், நோய்த்தொற்று எதிரியை வெல்வோம்.
இதுபோல அமைச்சர் தொடர்ந்து வெளியிட்டு வரும் பதிவுகளுக்கு கலவையான ரீயாக்ஷன், கமெண்ட்களாக வந்து விழுகின்றன.
குமார் ஐயந்துரை என்பவர், ‘நாட்டு வைத்தியம் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. அனைவரும் இந்த எளிய முறையை பின்பற்றுவோம்’ என குறிப்பிட்டிருக்கிறார். வீரமணி பிள்ளை என்பவர், ‘இந்த மஞ்சள் வைத்தியத்தால் ஆஸ்துமாவே குணமாகும். தயவுசெய்து தமிழ்மண் வளர்த்த சித்தமருத்துவ பெரியோர்களுக்கு அங்கீகாரம் கொடுங்கள். வேண்டுமானால் அவர்கள் மருத்துவ அறிவை சோதித்து பார்த்து சான்றிதழ் வழங்குங்கள். பாரம்பரியம் அழியும் நிலையில் உள்ளது. காப்பாற்றுங்கள்.’ என வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதுபோல பல கமெண்ட்கள்!
இன்றைய காலகட்டத்தில் கைவைத்தியம் மிக அவசியமானதே!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"