2018ல் வாட்ஸ் அப் மூலம் ஆபாச தொல்லை… 2019 பாஜகவில்…! – டிவி நடிகை ஜெயலட்சுமி, ரியல் ‘சிங்கப் பெண்’

டிவி நடிகை ஜெயலட்சுமி, பொதுவாக நடிகைகள் மீதான சிலரின் பார்வைகளுக்கு ‘தீ’ வைத்த தைரியசாலி எனலாம். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜெயலட்சுமி, உண்மையில் ஒரு ரியல் லைஃப் சிங்கப்பெண் என்பதற்கு கடந்த வருடம் நடந்த சம்பவமே ஒரு பெரும் சான்று. நடிகை ஜெயலட்சுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம்,…

By: Published: November 20, 2019, 5:36:23 PM

டிவி நடிகை ஜெயலட்சுமி, பொதுவாக நடிகைகள் மீதான சிலரின் பார்வைகளுக்கு ‘தீ’ வைத்த தைரியசாலி எனலாம். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜெயலட்சுமி, உண்மையில் ஒரு ரியல் லைஃப் சிங்கப்பெண் என்பதற்கு கடந்த வருடம் நடந்த சம்பவமே ஒரு பெரும் சான்று.

நடிகை ஜெயலட்சுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். தனது வாட்ஸ் ஆப் எண்னுக்கு அறிமுகம் இல்லா சில நபர்கள் ஆபாச தகவல்களை அனுப்புவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

அவரது புகார் குறித்து விசாரித்த விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் இந்த தகவலை அனுப்பிய விருகம்பாக்கத்தை சேர்ந்த துணை நடிகை ஏஜெண்டுகளான முருக பெருமாள் , கவியரசு ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க – காலை இழந்தபோதும், கலையை இழக்கவில்லை – சுதா சந்திரனின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி!

நடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்ப பட்டதை போலவே ஏராளமானவர்களின் செல்போனுக்கு பெண்களை தவறான வழிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் குறுந்தகவல்கள் அதிகமாக வருவதாகவும், பலர் புகார் அளிப்பதில்லை என்றும் இவர்களது வழிக்கு வரும் பெண்களை தவறான செய்கையில் ஈடுபடுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும் படிக்க – பெர்சனல் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனை! ஆனாலும், அசராத தாடி பாலாஜி – காரணம் இவர் தான்

நடிகையாக இருப்பதால், எல்லோருக்கும் தீனி போடும் செய்தியாக போய்விடுமே என்ற ஐயம் இல்லாமல், புகார் கொடுத்தால் குற்றவாளிகளை எப்படி எதிர்கொள்வது? என்ற துளி பயம் இல்லாமல், துணிச்சலாக வெளியே வந்து புகார் கொடுத்து அதிரடி காட்டினார் ஜெயலட்சுமி.

மேலும் படிக்க – கமல்ஹாசனை கொண்டாடும் இந்நேரத்தில் ‘டிவி கமல்ஹாசனை’ பலி கொடுத்துவிட்டோமே!!

இவரைப் போன்ற தைரியமான பெண்கள் இருப்பதால் தான், ‘நடிகை தானே…என்ன பண்ணிடப் போறா’ என்ற எண்ணம் வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர் சிலர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tv serial actress jayalakshmi vijay tv sun tv bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X