Advertisment

Aadhar: உங்கள் அடையாளம், ‘அப்டேட்’ ஆகாம இருக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்!

Aadhar card Cellphone Number change: ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது பயனுள்ளது மட்டுமல்ல இது பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற மிகவும் அவசியமானதும் கூட.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to Change your Mobile Number in Aadhaar Card - உங்கள் ஆதார் அட்டையில் கைபேசி எண்ணை எவ்வாறு மாற்றுவது?

UIDAI Tamil News: ஆதார் என்பது இந்திய அரசால் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் ஒரு 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண். ஒருவருடைய பயோ மெட்ரிக் தகவல்களான கண் கருவிழி ஸ்கேன், கைரேகை டெமோகிராபிக் தகவல்களான பிறந்த தேதி, முகவரி ஆகியவை இதற்காக பதிவு செய்யப்படும்.

Advertisment

உங்கள் ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது பயனுள்ளது மட்டுமல்ல இது பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற மிகவும் அவசியமானதும் கூட. ஆதார் தொடர்பான பல்வேறு ஆன்லைன் வசதிகளைப் பெறுவதற்கு நீங்கள் முதலில் உங்களுடைய கைபேசி எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (Unique Identification Authority of India- UIDAI) பதிவு செய்ய வேண்டும். அங்கீகாரத்திற்கான OTP ஐ அனுப்புவதற்கு இது பயன்படுத்தப்படும்.

பொது முடக்கத்திற்கு பிறகும் காஷ்மீரின் கைவினை தொழில் இருக்குமா?

எனினும் நீங்கள் உங்கள் எண்ணை தொலைத்து விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக உங்கள் ஆதார் அட்டையில் உள்ள கைபேசி எண்ணை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலோ அதை நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் டேட்டாபேஸில் (database) அதை புதுப்பிக்கலாம். இதற்கு நீங்கள் ஆதார் பதிவு மையத்துக்கு நேரடியாக செல்ல வேண்டும். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

aadhar card Cellphone Number change: ஆதாரில் கைபேசி எண்ணை எவ்வாறு மாற்றுவது?

ஆப்லைன் (offline) முறைகள் மூலமாக மட்டுமே ஆதாரில் உள்ள கைபேசி எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும். தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கைபேசி எண்களை ஆன்லைன் மூலமாக ஆதார் பதிவுகளில் மாற்றும் முறையை ஒழித்து விட்டது. எனினும் கைபேசி எண்ணை மாற்றுவதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் முறை மூலமாக பதிவிறக்கம் செய்து உங்கள் நேரத்தை சிறிது சேமித்துக் கொள்ளலாம். இதற்கு முதலில் உங்கள் பழைய கைபேசி எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பரவலாக, கைபேசி எண்ணை மாற்றுவதை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம்,

OTP ஐ வைத்து உங்கள் கைபேசி எண்ணை மாற்றுவது (உங்களிடம் உங்கள் பழைய கைபேசி எண் இருக்கும் போது)

OTP இல்லாமல் உங்கள் கைபேசி எண்ணை மாற்றுவது (உங்கள் பழைய கைபேசி எண் உங்களிடம் இல்லாமல் இருக்கும் போது)

OTP ஐ வைத்து உங்கள் கைபேசி எண்ணை ஆதாரில் எவ்வாறு மாற்றுவது

ஆன்லைன் மூலமாக இதற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை உருவாக்க வேண்டும். கைபேசி எண் புதுப்பித்தலுக்கான விண்ணப்ப படிவத்தை உருவாக்குவது.

ஆதார் அட்டை புதுப்பிக்கணுமா? பொது சேவை மையம் இருக்கு பாஸ்... டோன்ட் வொரி

Step 1: ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு https://ask.uidai.gov.in/ செல்லவும்.

Step 2: உங்கள் கைபேசி எண் மற்றும் captcha வை பயன்படுத்தி லாக் இன் செய்யவும். ‘Send OTP’ என்பதை தட்டவும்.

Step 3: பெறப்பட்ட OTP ஐ வலது பக்க பெட்டியில் உள்ளீடு செய்து ‘submit OTP and process என்பதை தட்டவும்.

Step 4: அடுத்து வரும் திரையில் update Aadhar என்பதை தட்டவும்.

Step 5: அடுத்து வரும் திரையில் காண்பிக்கப்படும் விவரங்களை நிரப்பி எதை புதுப்பிக்க வேண்டும் என கேட்கும் பிரிவில் ‘Mobile Number’ என்பதை தேர்வு செய்து, proceed என்பதை தட்டவும்.

Step 6: அடுத்து வரும் திரையில் உங்கள் கைபேசி எண் மற்றும் captcha ஆகியவற்றை நிரப்பி ‘Send OTP’ என்பதை தட்டவும். அடுத்து பெறப்பட்ட OTP ஐ உள்ளீடு செய்து ‘Save and Proceed’ என்பதை தட்டவும்.

Step 7: அனைத்தையும் சரிப்பார்த்து Submit என்பதை சொடுக்கவும்.

Step 8: அடுத்த திரையில் Success Screen மற்றும் உங்கள் Appointment id வரும். ‘Book Appointment’ என்பதை தட்டி ஆதார் பதிவு மையத்தில் ஒரு slot ஐ பதிவு செய்யவும்.

உங்களுக்கு வசதியாக உள்ள ஆதார் பதிவு மையத்தையும் வசதியான தேதியையும் தேர்வு செய்து Appointment ஐ புக் செய்யவும்.

OTP இல்லாமல் உங்கள் கைபேசி எண்ணை மாற்றுவதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்கு சென்று அங்கு கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றி கைபேசி எண்ணை மாற்றலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment