வெறும் 4 கிராம் பொடி ரூ. 82... நம்ம ஊருல கிடைக்கும் இந்தக் கீரைக்கு எம்புட்டு மவுசு பாருங்க: சொல்லும் மருத்துவர் சிவராமன்

உலக அளவில் முருங்கைக் கீரையின் தேவை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் கீரையாக இது விளங்குகிறது.

உலக அளவில் முருங்கைக் கீரையின் தேவை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் கீரையாக இது விளங்குகிறது.

author-image
WebDesk
New Update
Uses of moringa leaves

இயற்கையாக கிடைக்கும் அனைத்து உணவு பொருளிலும் ஏதோ ஒரு சத்து நிச்சயமாக இருக்கும். அதனை சரியாக கண்டறிந்து நம் உணவில் எவ்வாறு சேர்த்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு, நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

Advertisment

கீரை வகைகள் அனைத்திலும் பல்வேறு வகையான சத்துகள் இருக்கின்றன. ஆனால், இவை மிக எளிதாக கிடைத்து விடுவதால் இதன் பலன் குறித்து நமக்கு புரிவதில்லை. எத்தனையோ பிரச்சனைகளுக்கு முருங்கைக் கீரை மருந்தாக அமைகிறது.

தற்போது வரை கீரைகளிலேயே விலை மிகக் குறைவாக இருப்பது முருங்கைக் கீரை தான் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். ஆனால், முருங்கைக் கீரையை உலக அளவில் பல நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சந்தையை உலகம் உருவாக்கும். அந்த வகையில், இன்றைய உலகம் முருங்கைக் கீரையை தேடிக் கொண்டு இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். ஒரு முருங்கை கேப்சூலில் 500 மில்லி கிராம் அளவிற்கு இருக்கும். 

Advertisment
Advertisements

குறிப்பாக, 4 கிராம் முருங்கைக் கீரை ரூ. 82-க்கு விற்பனை ஆகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், முருங்கைக் கீரையின் மகத்துவத்தை நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

எனவே, இவ்வளவு நன்மைகள் இருக்கும் முருங்கைக் கீரையின் மகத்துவம் அறிந்து அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.

நன்றி - Darus Kitchen Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Moringa Leaves

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: