விந்தணுக்களின் எண்ணிக்கை, தரத்தை உயர்த்தும்… முருங்கையின் இந்தப் பொருளை இப்படி சாப்பிடுங்க; டாக்டர் மைதிலி
விந்தணுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகப்படுத்தி, அதனை தரமானதாக மாற்றும் திறன் முருங்கை பிசினுக்கு இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகப்படுத்தி, அதனை தரமானதாக மாற்றும் திறன் முருங்கை பிசினுக்கு இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையின்மை பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு முருங்கை பிசின் இயற்கையாகவே உதவி செய்கிறது என்று மருத்துவர் மைதிலி கூறுகிறார். ஏனெனில், இதில் அஃப்ரோடிசியா குணம் அதிகமாக இருக்கிறது. விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் ஆற்றல் முருங்கை பிசினில் இருக்கிறது. அதன்படி, இதனை எவ்வாறு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
Advertisment
இரும்புக் கடாயை அடுப்பில் வைத்து அதில், ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்க்க வேண்டும். இந்த நெய்யுடன் முருங்கை பிசினை சேர்த்து வறுக்க வேண்டும். இவ்வாறு வறுத்த பின்னர், இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு ஆற வைக்க வேண்டும்.
இதன் சூடு ஆறியதும் முருங்கை பிசினை மிக்ஸியில் அரைத்து பொடியாக மாற்ற வேண்டும். இந்தப் பொடியை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு அடைத்துக் கொள்ளலாம். இது தவிர அம்மியில் அரைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், முருங்கை பிசினை பொடியாக இடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த முருங்கை பிசின் பொடியை ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். இதைக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர, கண் பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் ஏ-வும், குடல் பகுதியின் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்தும் முருங்கை பிசினில் போதுமான அளவு இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை பிசினை சரியான முறையில் எடுத்துக் கொள்வது நம்முடைய ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.