Valentine’s Day Dos and Don’ts : பிப்ரவரி 14ம் நாளான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து காதலர்களாலும் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.
இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த நாள் மனதிற்குள் பூட்டி வைத்த காதல் எங்காவது ஓரு இடத்தில் வெளிப்படும்.
மேலும் படிக்க : காதலர் தினத்தை வீட்டிலே கொண்டாட வேண்டுமா ? இந்த படங்களை பாருங்கள்
Valentine’s Day Dos and Don’ts : காதலர் தினத்தில் எதையெல்லாம் செய்யக் கூடாது
அன்பு நிறைந்த நாளான இன்று பல ஜோடிகள் மகிழ்ச்சியாக கொண்டாடினாலும், சில ஜோடிகள் வழக்கம் போல் டிஷூம் டிஷூம் தான். அதற்கு காரணம் சில விஷயங்கள் தான்.
எனவே எதையெல்லாம் செய்ய வேண்டும் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை கூறுகிறோம்.
செய்ய வேண்டியது :
- சிரித்த முகத்துடன் இருங்கள்
- விட்டுக் கொடுத்து போக வேண்டும்
- அவ்வப்போது அவர்களை மகிழ்விக்கும் வார்த்தைகளை கூறுங்கள்
- ஐ லவ் யு சொல்லுங்கள்
- முடிந்தால் பரிசு வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்துங்கள்
- சொன்ன நேரத்திற்கு செல்ல வேண்டியது அவசியம்
- இந்த நாளை அவர்களுக்காகவே டெடிகேட் செய்துவிடுங்கள்
செய்ய கூடாதவை :
- ஒருவரை ஒருவர் குறைக் கூறக் கூடாது
- எதற்கெடுத்தாலும் வம்புக்கு இழுப்பதை செய்யவேக் கூடாது
- லேட்டாக செல்வதை தவிர்த்திடுங்கள்
- ஒருவேளை உங்கள் காதலர் அணிந்து வரும் ஆடை அல்லது ஆடையின் நிறம் பிடிக்கவில்லை என்றால் கூட அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- காதலி அணிந்திருக்கும் ஆடையை பற்றி சும்மாவே தப்பு கண்டுபிடிக்கக் கூடாது.
- அனைத்து பாலினத்தவருமே அவர்கள் துணையின் விருப்பமின்றி தொடக்கூடாது. இது நாளை மட்டுமல்ல எல்லா நாட்களுக்குமே பொருந்தும்.
- உங்களுக்கு பிடித்ததை தான் உங்கள் துணை செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு.
- சோம்பேரிகள் குளிக்காமல் செல்வதை தவிர்ப்பது அவசியம். மற்றவர்களின் ஆரோக்கியமும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- எந்த அளவு அல்லது விலையில் பரிசு வாங்கிக் கொடுத்தாலும் குறை சொல்லாமல் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- முன்னதாக காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால், அதைப் பற்றி நிச்சயம் நாளை பேசவே கூடாது. இது உங்கள் இருவருக்கான நாள் பழைய மாவை அரைக்கும் நாள் அல்ல.
- திருமணம் பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியவர்களை நாளை அது பற்றியே பேசி நச்சரிக்க வேண்டாம்
- மனதில் எவ்வளவு சஞ்சலம் இருந்தாலும் உங்கள் அன்பானவர்கள் பேசுவதை காது கொடுத்து கவனிக்காமல் இருப்பது தவறு