டேஸ்டி வத்தக் குழம்பு… முதல் முறை செய்யறவங்க இதைக் கவனிங்க!

sundakkai vatha kuzhambu in tamil: சுவையில் டேஸ்டாகவும், ருசியில் அல்டிமேட்டாகவும் உள்ள சுண்டைக்காய் வத்தக் குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

sundakkai vatha kuzhambu in tamil: சுவையில் டேஸ்டாகவும், ருசியில் அல்டிமேட்டாகவும் உள்ள சுண்டைக்காய் வத்தக் குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vatha Kuzhambu recipe in tamil: turkey berry recipes in tamil:

 sundakkai recipes in tamil: நம்முடை உணவு முறைகளில் குழம்பு வகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. அவற்றில் பிரபலமான ஒரு குழம்பாக வத்தல் குழம்பு உள்ளது. அதிலும் வீட்டு விசேஷங்களில் பரிமாறப்படும் வத்தல் குழம்பின் ருசியே தனி தான். இப்படி சுவையில் டேஸ்டாகவும், ருசியில் அல்டிமேட்டாகவும் உள்ள வத்தக் குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். குறிப்பாக முதல் முறை வத்தக் குழம்பு தயார் செய்யும் மக்கள் தவறாமல் கவனிக்கவும்.

Advertisment

வத்தக் குழம்பு செய்யத தேவையான பொருட்கள்:

தாளிக்க

கறிவேப்பிலை - 20
கொத்தமல்லி - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3
பூண்டு - 10
சின்ன வெங்காயம் - 30
பச்சை மிளகாய் - 3

Advertisment
Advertisements

புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
துருக்கி பெர்ரி அல்லது சுண்டக்காய் - 1/4 கப்

publive-image

செய்முறை:

முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் எலுமிச்சை அளவு புளியை தண்ணீர் விட்டு ஊற வைத்துக்கொள்ளவும். (10 நிமிடங்கள் போதுமானது).

பின்னர் ஒரு மிக்சி எடுத்து அதில் 2 தக்காளிகளை நறுக்கி பேஸ்ட் செய்து கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்தால் அதில் ஊற வைத்த புளிந்த புளி சாற்றை சேர்க்கவும். பிறகு அவற்றோடு தக்காளி பேஸ்ட்யை சேர்த்துக்கொள்ளவும்.

தொடர்ந்து அவற்றில் 1/2 டீ ஸ்பூன் உப்பு, மல்லி அல்லது தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 3/4 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன் ஆகிய தூள்களை சேர்த்து கரண்டியால் மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். அவற்றில் உலர்ந்த சுண்டைக்காயை இட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே எண்ணெயில், தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு தாளித்து கொள்ளவும்.

வெங்காயம் ஓரளவிற்கு நன்கு வதங்கிய பிறகு முன்னர் மிக்ஸ் செய்து வைத்துள்ள மசாலா கலவையை அதில் சேர்க்கவும்.

பிறகு 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும். அவை கொதித்து வந்த பின்னர் முன்னர் வறுத்து வைத்துள்ள சுண்டைக்காயை சேர்க்கவும். பின்னர் 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து கீழே இறக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான வத்தக் குழம்பு தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tips Healthy Food Lifestyle Food Recipes Food Tips Healthy Food Tamil News 2 Turkey Berry Benefits In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: