Vazhaithandu Poriyal: வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துமே மிகவும் பயனுள்ளவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் முக்கியமானது வாழைத்தண்டு. சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் பிரச்னை. அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டு ரத்தத்தை சுத்தம் செய்யும் திறன் கொண்டது. சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. நார்ச்சத்து மிகுந்தது. உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது. இதனை சூப்பாகவும், பொரியலாகவும், கூட்டாகவும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைத்தண்டை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் 1 ஸ்பூன் மோர் கலந்து நறுக்கிய வாழைத்தண்டுகளை அதில் போடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வாழைத்தண்டை சேர்க்கவும்.
அதனுடன் பாசிபருப்பை கழுவி தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து கிளறரவும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கடாயை மூடி வேகவிடவும். நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும்.
சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”