scorecardresearch

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா; சப்பாத்தி பரோட்டா தோசைக்கு பொருத்தமா இருக்கும்!

hotel style veg kurma: ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

veg kurma recipe in tamil: Delicious Hotel Style Veg Kurma Recipe in tamil

veg kurma recipe in tamil: வெஜ் குருமா செய்வதற்கென பல செய்முறைகள் உள்ளன. இருப்பினும், நாம் ஹோட்டல் ஸ்டைலில் இருந்தால் அதிகம் விரும்புகிறோம். எனவே சப்பாத்தி, பரோட்டா, தோசை என அனைத்திற்கும் பொருத்தமாக உள்ள ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை
வெங்காயம் – பெரியது 1
தக்காளி – பெரியது 1
உப்பு
மஞ்சள் தூள் – 1ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பீன்ஸ் – 1 கப்
கேரட் – 1 கப்
முளைகட்டிய பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
காலிபிளவர் – 1 கப் (சூடு தண்ணீரில் நன்கு கழுவியது)
பால் – 1/2 டம்ளர்


அரைக்க

தேங்காய் துருவல் – 1 கப்
கசகசா – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4,5

நீங்கள் செய்ய வேண்டியவை

ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை அவற்றோடு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது குருமாவிற்கான மசாலாவான மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். பிறகு குருமாவிற்கென நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறி தண்ணீர் சேர்க்கவும். பின்னர் குக்கர் என்றால் அவை ஓரளவு வேக தேவையான அளவு விசில் வைக்கவும்.

இதற்கிடையில், அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இப்போது முன்னர் வேக வைத்த காய்கறிகள் ஓரளவு வெந்த பின்னர், அவற்றுடன் இந்த மசாலாவை சேர்த்து கிளறி கொள்ளவும். அவை சில நிமிடங்களுக்கு கொதித்த பிறகு அவற்றோடு பால் சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடம் கழித்து 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அவற்றை நன்கு வேக விடவும்.

அவை நன்கு வெந்து தயாரானதும் அவற்றை கீழே இறக்கி கொத்தமல்லி இலைகளை தூவி சப்பாத்தி, தோசைகளுக்கு பரிமாறவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Veg kurma recipe in tamil delicious hotel style veg kurma recipe in tamil

Best of Express