வீகன் டயட்டில் ( சைவ உணவுமுறை) உடலுக்கு தேவையான ஆரோக்கியம் இருக்கிறது. எனவே வீகன் உணவுகளை உட்கொள்வதால் உடல் எடை மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் குறையும் என தெரியவந்துள்ளது.
எப்போதுமே நன்மை பயக்கக்கூடியது என்றால் அது சைவ உணவுகள் தான். மேலும் குடலில் இருக்கக்கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் வீகன் டயட்டை பின்பற்றுவதால் இன்னும் உற்சாகமாக செயல்பட்டு நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை குறைவதற்கு பயன்படுகிறது. வீகன் டயட்டை 16 வாரங்கள் பின்பற்றினால் உடல் எடை குறையும் என நம்பப்படுகின்றது. அத்தோடு இரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.
அதிக உடல் எடையுடன் இருந்தவர்களிடம் தொடர்ச்சியாக 16 வாரங்கள் வீகன் டயட் உணவுகள் வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் உடல் எடை குறைவு, இன்சுலின் சுரப்பு ஆகியவை சீராக இருப்பது தெரிய வந்துள்ளது.
147 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் 86 சதவிகிதம் பெண்களும், 14 சதவிகித ஆண்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு லோ-ஃபேட் வீகன் டயட் வழங்கப்பட்டது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.
மேலும் கொழுப்புச்சத்து குறைந்த உணவுகளை உட்கொண்டதால் உடல் எடை குறைவதும் உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இயங்குவதும், உடல் எடை குறைவதும், குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியா மேலும் ஆரோக்கியமாக இருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நார்ச்சத்து நிறைந்த உணவை தொடர்ச்சியாக உட்கொண்டதால் உடலில் கலோரிகள் குறைந்துள்ளதாகவும் ஆகவே, வீகன் உணவுகளை உட்கொள்வதால் உடல் எடையும் குறையும், இரத்த சர்க்கரையும் குறயும் என தெரிவித்துள்ளனர்.