Vegetable Chapati making tamil, Vegetable Chapati preparation: தினம் தினம் புதிய உணவுகளை சாப்பிட யாருக்குத் தான் பிடிக்காது? ஆனால் இப்போது இருக்கும் சூழலில் முடிந்தளவு அனைத்தையும் வீட்டில் செய்து சாப்பிடுவதே சிறந்தது என்கிறார்கள். அதனால் நாம் நாள்தோறும் சாப்பிடும் உணவுகளையே இன்னும் ஆரோக்கியமாக முயற்சி செய்து, வித்தியாசமாக டேஸ்ட் செய்யலாம். அந்த வகையில் ஹெல்தியான வெஜிடபிள் சப்பாத்தி எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள்: இளம் வயதில் மறைந்த சோகம்
Vegetable Chapati preparation: வெஜிடபிள் சப்பாத்தி
தேவையானப் பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
கேரட், கோஸ், பீட்ரூட், குடமிளகாய் துருவியது - ஒரு கப்
மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - சப்பாத்தி சுடுவதற்குத் தேவையானது.
செய்முறை
எண்ணெயைத் தவிர மீதிப் பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.
மிளகாய்த் தூள் அல்லது அதற்கு பதிலாக, இரண்டு பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, மாவில் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம். இதனால் சுவை இன்னும் அதிகமாகும்.
பிசைந்த மாவை, சப்பாத்திகளாகத் திரட்டி, தோசை தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம்.
’ஏர்போட்ல ரஜினி கூட அந்த சந்திப்பு…’ ரகசியம் உடைத்த கிரிக்கெட் நட்சத்திரம்
பயன்கள்
சுவையான சப்பாத்தி இது. இதில் நார்ச்சத்துக்கள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, புரதம் போன்றவை உள்ளன. சருமத்துக்கு நல்லது. வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”