எந்த விஷயம் உங்களை சைவம் உட்கொள்ள தூண்டியது என்று ஆராய்ச்சியாளர் கேட்டார்கள். அதற்கு மூன்று நோக்கங்களையும் அவர்கள் கொடுத்திருந்தார்கள். உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் உரிமை என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஒரே நேரத்தில் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிந்தனை ஏற்பட்டு, இயற்கை வாழ்வியல் முறையை பழக வேண்டும் என்று கருதுகிறார்கள். இதனால் தாவர உணவுகளுக்கு திரும்பி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்வதற்கு முயல்கிறார்கள். சைவ உணவு உண்பது பெருகிவருகிறது. அசைவப்பிரியர்களும், சைவ உணவு உட்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். மற்ற எதையும்விட, உடல் நலன் தான் முக்கிய காரணமாக சைவ உணவுக்கு மக்கள் செல்வதற்கான காரணமாக ஆய்வு தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் இந்த ஆய்வின் துணை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜே ஹாப்வுட், மக்கள் சைவ உணவை உட்கொள்பவர்களாக மாறுவதற்கான பொதுவான காரணம் உடல் ஆரோக்கியம் மட்டுமேயன்றி, சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் உரிமை சிந்தனையோ கிடையாது என்று கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்கைளை பொறுத்தவரையில், சாப்பிடுவது அடிப்படையான பழக்கவழக்கம். இந்த ஆய்வுக்கட்டுரை பிளோஸ் ஒன் என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஹாலாந்தில் உள்ள 8000 மக்களிடையே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர்கள் வெவ்வேறு வயதுடையவர்கள், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கணக்கெடுப்பு ஏன் சில அசைவ விரும்பிகள், சைவ உணவுக்கு மாறினார்கள் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்டது. எந்த விஷயம் உங்களை சைவம் உட்கொள்ள தூண்டியது என்று ஆராய்ச்சியாளர் கேட்டார்கள். அதற்கு மூன்று நோக்கங்களையும் அவர்கள் கொடுத்திருந்தார்கள். அவை உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் உரிமை என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் வெற்றி பெற்றது உடல் ஆரோக்கியம் மட்டுமே, மற்ற இரண்டு காரணங்களை விட உடல் ஆரோக்கியம் மட்டுமே தங்களை சைவம் விரும்பி உண்பவர்களாக மாற்றியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே சைவப்பிரியர்களாக இருந்தவர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் உரிமை காரணமாக இருந்ததும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. சைவத்திற்கு மாறியதற்கு விலங்குகள் உரிமை மற்றும் சுற்றுச்சூழலை காரணமாக கூறியவர்கள், கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும், அனுபங்களுக்கு திறந்த மனதுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
உடலுக்கு தரும் நன்மைகள்
அமெரிக்காவின் இதய சங்கத்தின் பத்திரிக்கையில் வெளியான ஆய்வுக்கட்டுரையின்படி, தாவரத்தில் இருந்து பெறப்படக்கூடிய உணவுகளை அதிகளவும், மாமிச உணவுகளை குறைவான அளவும் உண்ணும், நடுத்தர வயதுடையவர்களுக்கு ஆரோக்கியமான இதயம் உள்ளதாகவும், இதய நோய்கள் வருவதற்கான ஆபத்துக்கள் குறைவாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. குறைவாக அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பக்கவாதம், உயர் கொழுப்பு, இரண்டாவது வகை நீரழிவு, ரத்த அழுத்த பிரச்னைகள் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
தாவர உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் தங்கள் உடல் எடையை முறையாக பராமரிக்க முடியும் என்று கூடுதலாக தெரிவிக்கிறது. அதற்கு காரணம் உணவில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள தண்ணீர் அளவு மற்றும் நார்ச்சத்து முழுதாக சாப்பிட்ட உணர்வையும் சக்தியையும் அளிப்பதாக ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.