Advertisment

உடல் சூட்டை தணிக்க, முடி வளர... ஹெல்தி & டேஸ்டியான வெந்தய குழம்பு!

வெந்தயத்தில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டுவதை குறைத்து கருமையாகவும், நீளமாகவும் வளர உதவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vendhaya kuzhambu recipe, Vendhaya Kuzhambu Recipe video

வெந்தய குழம்பு

Vendhayam Kuzhambu Tamil :  உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் வெந்தயம், உடல் ஆரோக்கியத்துக்கும், அழகு பராமரிப்புக்கும் உகந்தது. வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தை தணிக்கிறது. மலச்சிக்கலை சீராக்கும்.  வெந்தயத்தில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டுவதை குறைத்து கருமையாகவும், நீளமாகவும் வளர உதவும்.

Advertisment

நாதஸ்வரம் டூ பாரதி கண்ணம்மா: ரசிகர் பட்டாளத்தை பெருக்கிய ஸ்ருதி!

இப்படி பல மருத்துவ குணம் உள்ள வெந்தயத்தை எப்படி குழம்பு செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்

வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு

பூண்டு - 15 அல்லது 20 பற்கள்

புளி - நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - சிறிதளவு

குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

வெல்லம் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட சீனாவின் கண்காணிப்பு பட்டியலில் 30 நீதிபதிகள்

செய்முறை

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

வெந்தயம் சிவந்து மணம் வந்த பின்பு அதில் புளியைக் கரைத்து விடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.

இப்போது வேறொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்க்கவும். குழம்பு கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment