Advertisment

உணவுக்குப் பிறகு 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு… இதில் இவ்வளவு நன்மை இருக்கு!

வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் பிடிக்காதவர்கள், வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள்கூட, வெற்றிலையில் உள்ள மருத்துவக் குணத்தை மறுக்க முடியாது. உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vetrilai juice benefits, betel juice benefits for health, Betel Juice, Vetrilai juice, Vetrilai juice for digest, வெற்றிலைச் சாறு நன்மைகள், உணவுக்குப் பிறகு 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு, Vetrilai, Betel leaf, Betel leaves

நவீன நாகரீக காலத்தில் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் குறைந்து வருகிறது. ஆனால், எல்லா விசேஷங்களிலும் வெற்றிலை தவறாமல் இடம்பெறுவது மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விருந்துக்கு பிறகு வெற்றிலைப் போடும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. உங்களுக்கு வெற்றிலைப் போடும் பழக்கம் இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால், உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisment

வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் பிடிக்காதவர்கள், வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள்கூட, வெற்றிலையில் உள்ள மருத்துவக் குணத்தை மறுக்க முடியாது. உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மக்கள் விருந்துகளுக்கு பிறகு, ஜீரணம் ஆவதற்காக வெற்றிலைப் பாக்கு போடுகிறார்கள். ஆனால், அது அளவுக்கு அதிகமாக, ஒரு பழக்கமாக தொடர்ந்தால், நல்லதல்ல. விருந்தாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும். இன்றைக்கு வெற்றிலையின் பயன்கள் என்ன வென்று தெரிந்துகொள்வோம்.

விருந்துகளில், எண்ணெய் ,டால்டா, நெய் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. உணவை செரிமானம் செய்ய நம் உணவுப்பாதையில் என்சைம்கள், அமிலங்கள், ஹார்மோன்கள் உணவை சுரக்கிறது. இந்த சுரப்பியில் கோளாறுகள் ஏற்பட்டாலும் அஜீரணம் ஏற்படும். அப்போது எண்ணெய் தனியாக இருக்கும். இதனாலும் அஜீரணம் ஏற்படும். அஜீரணக் கோளாறுக்லைத் தவிக்க அளவாக சாப்பிட வேண்டும்.

அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்க சில குறிப்புகளை இங்கே பாக்கலாம். குறிப்பாக, உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

1 .அதிகமாக அடிக்கடி செரிமான கோளாறால் பாதிக்கப்பட்டு புளித்த ஏப்பம் விடுவோர் ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறு மற்றும் புளித்த ஏப்ப சரியாகிவிடும்.

2 .செரிமான பிரச்னையால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அவஸ்தைப்படுகிறீர்கள் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு, வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அந்த பிரச்சினை சரியாகிவிடும். இதனால்தான், சாப்பிட்ட பிறகு வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், நவீன நாகரீக உலகில் வெற்றிலைப் போடுவதை விட்டுவிட்டார்கள்.

3 .அஜீரணக் கோளாறால் வயிறு உப்பசம் ஏற்பட்டு, சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால், சாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் 100கிராம் எடுத்துக்கொண்டு, அதை பொடி செய்து சாப்பிடுவதற்கு முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment