எதிர்பாராத வாய்ப்பு : அஞ்சலி துள்ளி குதித்த அந்தத் தருணம்!

Bharathi Kannamma Anjali: முக்கியமான வில்லி ரோலை கையில் கொடுத்து வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள் பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர்.

Kanmani Manoharan : சினிமா நடிகைகளைப் போலவே சீரியல் நடிகைகளைப் பற்றி அறிந்துக் கொள்வதிலும், மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்கள் ரசிகர்கள். அதன் படி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் அஞ்சலியின் நிஜப் பெயர் கண்மணி மனோகரன்.

டாக்டர்களின் தீவிர முயற்சி : ஒரு வழியாக இத்தாலியில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா!

அஞ்சலியைப் பெண் பார்க்க வரும் பாரதிக்கு, அவளது அக்கா, கண்ணாம்மாவை பிடித்துப் போக, அவளையே திருமணம் செய்துக் கொள்கிறான். பாரதியின் தம்பி அகிலுக்கு அஞ்சலியைப் பிடித்துப் போக, இது தான் நேரம் என்று கருதி, தம்பியை திருமணம் செய்துக் கொண்டு, கண்ணாம்மா வாழ்க்கையைக் கெடுத்து, பாரதியை அடைந்து விடலாம் என கணக்குப் போடுகிறாள் அஞ்சலி. இப்படியான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கண்மணி.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவரை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ஸ்வீட்டி. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பிற்காலத்தில் ஒரு ஈஸியான வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் கண்மணிக்கு. அப்போது அவரது மனதுக்குள் உதித்தது தான் நடிப்புத் துறை.  ஒரு நாள், ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த கண்மணி, தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அடுத்த நாள், பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்டிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

செலக்ட் ஆவோமா, என பாதி சந்தேகத்தில் அந்த ஆடிஷனில் கலந்துக் கொண்டாராம் கண்மணி. ஆனால் அவருக்கு அடித்ததோ ஜாக்பாஅட். ஆம்! முக்கியமான வில்லி ரோலை கையில் கொடுத்து வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள் பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர். இதைக் கேட்ட கண்மணிக்கு தலை கால் புரியவில்லையாம். தனது இயல்பான ஜாலி கேரக்டருக்கு கான்ட்ராஸ்டாக வில்லியாக நடிப்பதில் சில நாட்கள் சிரமம் இருந்ததாம்.

கொரோனா பாதிப்பு – 350 படுக்கைகளுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி! (வீடியோ)

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோழிகளுடன் வெளியில் சுற்றும் கண்மணிக்கு மியூஸிக் கேட்பதும் பிடித்தமானதாம். உணவு என்றால் சைனீஸ், தாய்லாந்து உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம். லைட் கிரீன், லெமன் எல்லோ நிற உடைகள் என்றால் அ(கொ)ஞ்சலிக்கு கொள்ளை பிரியமாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close