Roshini Haripriyan : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில், நடித்து வருபவர் ரோஷினி ஹரிபிரியன். கண்ணம்மாவின் மாமியாருக்கு கறுப்பு என்றாலே பிடிக்காது. ’வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போல, சிவப்பு நிறத்தில் அழகாக இருப்பவர்கள் தான் நல்லவர்கள், நாலும் தெரிந்தவர்கள் என்பது அவரின் எண்ணம். ஆனால், கண்ணம்மா கர்ப்பமானதும், மாமியார் செளந்தர்யாவிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது.
சிகிச்சை அளித்ததால் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்… மீண்டு வந்து அதே வார்டில் சேவை!
இது ஒருபுறமிருக்கட்டும். சென்னையில் பிறந்து வளர்ந்த ரோஷினி, சென்னை செயின்ட் மேரீஸ் பெண்கள் பள்ளியில் பள்ளி படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர். கல்லூரி முடித்ததும், ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ரோஷினி, அங்கு இரண்டு வருடம் வேலை செய்திருக்கிறார். பின்னர் வேலையை விட்டு விட்டு மாடலிங் துறைக்குள் புகுந்திருக்கிறார்.
சின்ன வயதில் இருந்தே மாடலிங் பண்ணனும் என்கிற ஆசை இருந்தாலும், மாநிறத்தில் இருப்பதால், சிவப்பாக இருப்பவர்களால் மட்டும் தான் இதெல்லாம் செய்ய முடியும் என, நினைத்து அதற்கான முயற்சிகளை எடுக்காமல் விட்டு விட்டாராம் ரோஷினி. பின்னர் ஸ்கின் டோன் நன்றாக இருப்பதாகக் கூறி, வாய்ப்புகள் வந்ததாம். பின்னர் மாநிறமாக இருக்கும் பெண்ணை மையமாக வைத்து, சீரியல் எடுப்பதாகக் கூறி ரோஷினியை அணுகினார்களாம். அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
’யம்மி’ தமன்னா ரெசிப்பீ, ‘வாவ்’ அபர்ணா: புகைப்படத் தொகுப்பு
பள்ளியிலும், கல்லூரியிலும் நிறத்தால் நிறைய இறக்கங்களை சந்தித்த ரோஷினி, கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் தான் நிறம் குறித்த நிதர்சனத்தைப் புரிந்துக் கொண்டாராம். அதோடு பாரதி கண்ணம்மா சீரியலில் டார்க் மேக்கப் இல்லாமல், ஒரிஜினல் ஸ்கின் டோனோடு தான் நடிக்கிறாராம் ரோஷினி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.